முகப்புஎம்மை பற்றிவிளம்பரம்செய்திகள்தொடர்பு
Home > Slider > எம்மீது இறக்கம் காட்டாத கம்பனிகாரர்களுக்கு தொடர்ந்தும் அழுத்தத்தை கொடுக்க வேண்டும்.அனுஷியா சிவராஜா தெரிவிப்பு!!

எம்மீது இறக்கம் காட்டாத கம்பனிகாரர்களுக்கு தொடர்ந்தும் அழுத்தத்தை கொடுக்க வேண்டும்.அனுஷியா சிவராஜா தெரிவிப்பு!!

மலையகத்தின் பெரும்பாலான இடங்கள் வேலைநிறுத்தபோராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர்.தீர்க்கமான முடிவு எட்டும் வரை தொடர்த்தேர்ச்சியான போராட்டத்தை முன்னெடுக்க வேண்டுமென இ.தொ.கா தலைவர் ஆறுமுகன் தொண்டமான் வழியுறுத்தியமைக்கு அமைய பல இடங்களில் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

இப்போராட்டம் பாரிய வெற்றியளித்திருப்பதாக இ.தொ.கா பொதுச்செயலாளர் அனுஷியா சிவராஜா ஊடகங்களுக்கு வழங்கிய காணொளியில் தெரிவித்தார்.

ஏற்கனவே சங்கிலித்தொடர் போராட்டம் செய்தும் கம்பனிக்காரர்கள் நியாயமான சம்பளத்தை பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு வழங்க முன்வரவில்லை.எனவே கம்பனிகாரர்களுக்கு அழுத்தத்தை கொடுக்கும் முகமாக அனைவரும் ஏகமனதா எடுத்த முடிவு தொடர்ச்சியாக பணிபகீஸ்கரிப்பு போராட்டம் எனவே இப்போராட்டத்தை உரிய முறையில் செயற்படுத்தி வெற்றி காண வேண்டும்.

அதுமட்டுமல்லாமல் பெருந்தோட்ட தொழிலாளர்களுடன் இணைந்து வர்த்தகர்கள்,உத்தியோகத்தவர்கள் மறௌறும் ஏனைய சங்கத்தினர் என்போரும் ஒற்றுமையாக இணைந்து இப்போராட்டத்திற்கு ஆதரவு அளிக்குமாறு கேட்டுக்கொண்டார்.

 

நீலமேகம் பிரசாந்த்

Leave a Reply

error: Content is protected !!