முகப்புஎம்மை பற்றிவிளம்பரம்செய்திகள்தொடர்பு
Home > Slider > இன்றையதினமும் பணி புறக்கணிப்பில் ஈடுபட்டனர் கொத்மலை ஹெல்பொட தோட்ட மக்கள்!!

இன்றையதினமும் பணி புறக்கணிப்பில் ஈடுபட்டனர் கொத்மலை ஹெல்பொட தோட்ட மக்கள்!!

மலையக பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு ஆயிரம் ரூபா சம்பளத்தை பெற்றுக்கொடுக்கும் வரை பணிப்புறக்கணிப்பில் ஈடுபடுமாறு இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தலைவரும் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஆறுமுகன் தொண்டமான் அறிவித்ததிற்கு இணங்க மலையகத்தில் பல்வேறு இடங்களில் போராட்டங்கள் முன்னெடுகௌகப்பட்டு வருகின்றன.

அந்தவரிசையில் இரண்டாவது நாளாகவும் பணி புறக்கணிப்பில் ஈடுபட்டனர் கொத்மலை பிரதேச சபைக்கு உட்பட்ட ஹெல்பொட கட்டுக்கித்தால பகுதியில் முன்னெடுக்கப்பட்டன.மேலும் ஊரின் அனைத்து மக்களும் எவ்விதமான கட்சி பாகுபாடின்றியும் அனைத்து தொழிலாளர்களும் போராட்டத்தில் பங்கு கொண்டனர்.

1000 ரூபாய் சம்பளம் அதிகரிக்கப்பட வேண்டும்.இப்போராட்டம் கட்சிகளுக்கிடையில் நடைபெறும் போராட்டமல்ல இது கம்பனிகாரர்களுக்கு எதிரான போராட்டம் எனவே இதில் கட்சி பாகுபாடு காட்டக்கூடாது என அனைத்து மக்களும் ஒன்றாக இணைந்து இவ் ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்தனர்.

 

மேலும் இப்போராட்டத்தில் கலந்துக்கொண்ட மக்கள் கம்பனிகளுக்கு எதிரான எதிர்ப்பை டயர்கள் எறித்தும், கோஷங்கள் எழுப்பியும் போராட்டத்தை முன்னெடுத்தது குறிப்பிடத்தக்கது.

 

நீலமேகம் பிரசாந்த்

Leave a Reply

error: Content is protected !!