மூன்று தவணைகள் கடந்தும் இன்னும் பாடநூல்களும் பூர்த்தியாக்கப்படவில்லை. எழுத்துக்கொப்பிகளும் முழுமையாக்கப்படவில்லை. பெற்றோர்கள் கடும் கண்டனம்!!

0
101

பாடசாலையில் மூன்று தவணைகள் நிறைவடைந்தும் இன்னும் பாடசாலையில் பாடநூல்களும் ,அப்பியாச கொப்பிகளும் பூர்த்தியாக்கப்படவில்லை என பெற்றோர்கள் கண்டனம் தெரிவிக்கின்றனர்.ஒரு வருடங்கள் ஆகியும் இன்னும் முழுமையாக பாடநூல்கள் பூர்த்தியாக்கப்படவில்லை அதுமட்டுமல்லாமல் ஒழுங்காக பூர்த்தியாக்கப்படாமல் எவ்வாறு பிள்ளைகளுக்கு அறிவு வரும்.அடுத்த ஆண்டில் காலடி எடுத்து வைக்க முதல் ஆண்டில் பிள்ளைகள் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டுமல்லவா அப்படி இருக்கையில் இன்னும் பாடநூல்கள் பூர்த்தியாக்கப்படாதது ஏன் என பெற்றோர்கள் கேள்வி எழுப்புகின்றனர்.

அதுமட்டுமல்லாமல் பிள்ளைகள் நன்றாக படிக்க வேண்டும் என தங்களின் குடும்ப கஸ்டங்களை பாராமல் கடன்பட்டவது கொப்பிகளை வாங்கி கொடுக்கின்றனர்.ஆனால் இன்னும் ஏறாளமான ஏடுகள் கொப்பிகளில் காணப்படுகின்றன.அதும் பாடசாலைக்கு வரும் போது 200 பக்கங்களை கொண்ட கொப்பிகளை வாங்கி வர கூறி 40 பக்கங்களே முடிக்கப்பட்டு உள்ளன.ஒரு சில ஆசிரியர்களின் இவ்வாறான செயற்பாடே மாணவர்களின் பின்தங்கிய நிலைக்கு காரணமாக அமைகின்றன.

சாதாரண தரத்தில் இருந்து உயர்தரத்திற்கு செல்லும் விகிதம் கு றைவாக இருப்பதற்கு இவ்வாறான கற்பித்தல் முறைகளே காரணம்.இது பெரும்பாலும் மலையகத்திலே அங்கேறுகின்றது.பாடசாலைமாண நேரங்களில் ஆசிரியர்கள் முகநூலில் மூழ்கி கிடப்பதே இதற்கு காரணம்.

வீட்டில் உணவு இல்லாவிடினும் தங்களின் பிள்ளை படிப்பிற்காக கஸ்டத்துடன் கொப்பி வாங்கி கொடுத்து தான் பிள்ளை இப்படி முன்னேற வேண்டுமென காத்துக்கொண்டிருக்கும் பெற்றோர்களின் சாபத்தை பெற்றுக்கொள்ளாதீர்கள்.

குறிப்பு:
இது நம்பி இருக்கும் பெற்றோரையும்,மாணவர்களையும் ஏமாற்றும் ஒருசில ஆசிரியர்களுக்கான பதிவு

 

நீலமேகம் பிரசாந்த்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here