மலையக பெருந்தோட்ட தொழிலாளர்களின் மூன்றாவது நாளாகவும் தொடர்ந்து கொண்டு இருக்கும் வேளையில்
06.12.2018.வியாழகிழமை காலையில் இருந்து நோர்வூட் வெஞ்சர்
அப்பலோரன்ஸ் மேற்பிரிவூ தோட்ட தொழிலாளர் பணிப்புறக்கணிப்பை தவிர்த்து
தேயிலை கொழுந்து பறித்த சம்பவம் ஒன்று வெஞ்சர் தோட்டபகுதியில் இடம்
பெற்றள்ளது, தோட்டதேயிலை தொழிற்சாலைக்கு கொண்டு செல்வதற்காக தங்களது
தேயிலை கொழுந்தினை அளவீடு செய்து கொள்ள வந்த 56தொழிலாளர் தேசிய
சங்கத்தின் ஆதராவளர்களை இலங்கை தொழிலாளர் காங்ரசின் ஆதரவாளர்கள் வழிமறித்து அவர்களை செல்லவிடாது தடுத்தனர்.
மலையகம் எங்கும் ஆயிரம் ருபா அடிப்படை சம்பளம் கோரி பணிப்புறக்கணிப்பில்
ஈடுபட்டு கொண்டிருக்கும் தொழிலாளர் தேசிய சங்கத்தின் ஆதரவாளர்கள்
இன்றய தினம் தேயிலை மலைகளுக்கு சென்று தேயிலை கொழுந்து பறிக்கும் பணியில்
ஈடுபட்டுள்ளனர் எனவே இது ஒரு காட்டி கொடுப்பு செயல் என கூறி
பறிக்கபட்டு வந்த தேயிலை கொழுந்தினை தொழிற்சாலைக்கு கொண்டு செல்ல அனுமதிக்க முடியாது என
இலங்கை தொழிலாளர் காங்ரசின் ஆதரவாளர் தெரிவித்தனர்
இந்த சம்பவம் தொடர்பில் தோட்டமுகாமையாளர் மற்றும் நோர்வூட் பொலிஸார்
ஆகியோர் சம்பவ இடத்திற்கு வரவழைக்கப்பட்டு பின்னர் தொடரும் போராட்டம் முடிவுக்குவருவரை கொழுந்து பறிப்பதற்கு யாருக்கும் இடமளிக்கமுடியாது என இதொகாவினர் வாதாடினர் இதன்போது அங்கு பதற்றநிலை ஏற்பட்டது.
இதன் பின்னர் இரு தரப்பினருக்குமிடையில் சமரச நிலை உருவானது, நாளை முதல் இரு தரப்பினரும் வேலைக்கு போவதில்லை என்ற இணக்கப்பாட்டோடு பிரச்சினை முடிவுக்கு வந்தது, கொய்த கொழுந்துகளை வீதியோரத்தில் கொட்டிவிட்டு தொழிலாளர் அங்கிருந்து களைந்து சென்றனர், வீதியோரத்தில் கொட்டப்பட்ட கொழுந்தினை போலீஸ் பாதுகாப்போடு தொழிற்சாலைக்கு எடுத்து செல்லப்பட்டது.
(பொகவந்தலாவ நிருபர் எஸ்.சதீஸ்)