முகப்புஎம்மை பற்றிவிளம்பரம்செய்திகள்தொடர்பு
Home > Slider > 1440கிலோ தேயிலை கொழுந்தில் மண்ணெண்ணை ஊற்றியவர்கள் மீது ஹட்டன் பொலிஸ் நிலையத்தில் முறைபாடு

1440கிலோ தேயிலை கொழுந்தில் மண்ணெண்ணை ஊற்றியவர்கள் மீது ஹட்டன் பொலிஸ் நிலையத்தில் முறைபாடு

மலையக பெறுந்தோட்ட தொழிலாளர்களின் ஆயிரம் ரூபா அடிப்படை சம்பளத்தினை வழியுருத்தி மலையகத்தில் முன்னெடுக்கபட்டு வருகின்ற பணிபுரக்கணிப்பு ஆர்பாட்டமானது மலையகம் முழுவதும் இடம்பெற்று வருகின்ற நிலையில் சில
தோட்டபகுதிகள் உள்ள தோட்ட தொழிலாளர்கள் 06.12.2018.வியாழகிழமை இன்று பணிபுரக்கணிப்பை கைவிட்டு சில தொழிலாளர்கள் இன்ற தினம் தொழிலுக்கு திரும்பியுள்ளனர்

இந் நிலையில் ஹட்டன் பொலிஸ்பிரிவிற்குட்பட்ட ஹட்டன் செனன் தோட்டபகுதியில் இன்றைய தினம் தொழிலுக்கு சென்று தேயிலை கொழுந்தினை பறித்து இருந்தமையும் குறிப்பிடதக்கது அந்தவகையில் செனன் தோட்ட தொழிலாளர்களால் பறிக்கபட்ட
1440கிலோ கொழுந்தினை மலை ஒன்றினுல் இருந்து ஹட்டன் செனன் தோட்ட தேயிலை தொழிற்சாலைக்கு டெக்டரி ஒன்றில் ஏற்றிவரும் போது தொழிற்சாலைக்கு செல்லும் வீதியில் இனந் தெரியதாவர்களால் குறித்த டெக்டரியை வழிமறித்து
தேயிலை கொழுந்தில் மண்ணெண்னையை ஊற்றியுள்ளதாக குறித்த டெக்டரியின் வாகனசாரதி ஹட்டன் பொலிஸ் நிலையத்தில் முறைபாடு ஒன்றினை பதிவு செய்துள்ளார்.

05 03 01

இந்த சம்பவம் இன்று மாலை 03.30மணி அளவில் இடம் பெற்றுள்ளதாக பதிவு செய்யபட்ட முறைபாட்டில் இருந்து தெரியவந்துள்ளது குறித்த முறைபாட்டுக்கு அமைய சந்தேக நபர்களை கைது செய்வதற்கான நடவடிக்கையினை ஹட்டன் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடதக்கது.

 

(பொகவந்தலாவ நிருபர் எஸ்.சதீஸ்)

Leave a Reply

error: Content is protected !!