முகப்புஎம்மை பற்றிவிளம்பரம்செய்திகள்தொடர்பு
Home > Slider > தேசிய கொடியை கட்டி குளிக்கும் அளவுக்கு இலங்கையின் நிலை தள்ளப்பட்டுள்ளது- கண்டியில் பதிவான சம்பவம்

தேசிய கொடியை கட்டி குளிக்கும் அளவுக்கு இலங்கையின் நிலை தள்ளப்பட்டுள்ளது- கண்டியில் பதிவான சம்பவம்

Look At This இன்று இலங்கை நாட்டில் வாழும் ஒரு குடிமகனுக்கு தனது நாட்டின் தேசிய கொடிக்கான மதிப்பு மறியாதை தெரியாத நிலையில் குறிப்பாக பாமர மக்கள் இருப்பது கவலைக்குறிய விடயமாகும். “இது என்னா ஒரு துணி தானே” என்ற எண்ணத்தை அவர்களுக்கு தோன்ற வைத்து தனது நாட்டின் தேசிய கொடியை கட்டி குளிக்கும் அளவுக்கு சென்றுள்ளார்கள். இந்த பதிவு கண்டி மாவட்டத்தின் பிரதான நகரம் ஒன்றில் பதிவானது.இதற்கு எல்லாம் இலங்கை நாட்டின் அரசியல்வாதிகள் பதில் சொல்லியாக வேண்டும். அன்மை காலங்களில் இலங்கையின் பாராளுமன்றத்தில் மக்களால் தெரிவு செய்யப்படவர்கள் நடந்துக் கொண்ட விதம் உட்பட இலங்கை அரசியல் யாப்பு மீறல் இதை விட மோசமானதாகும். இவ்வாறான செயற்பாடுகளின் பிரதிபலிப்பே இச் சம்பவத்திற்கு காரணமாக இருக்கலாம். மக்களால் மக்களுக்காக தெரிவு செய்யபட்டவர்கள் முன் மாதிரியாக செயற்பட வேண்டும் அவர்களே கேவலமாக நடந்துக் கொள்ளும் பொழுது பாமர மக்கள் என்ன செய்வார்கள்.

online Seroquel buy நான் ஒரு ஊடகவியளார் என்ற வகைளில் இந்த செயற்பாட்டை கண்டு மிகவும் மனவருத்தம் கொண்டதுடன். உடனே குறித்த நபரிடம் சென்று இந்த செய்பாடு குறித்து அன்புடன் வினாவினேன். அவர் கூறியது “இது என்னா துணிதானே” பாராளுமன்றத்தில் நடக்காததா நடந்து விட்டது என்று சிறித்துக் கொண்டே கூறினார். சரி அய்யா தேசிய கொடியின் மகிமை தெரியுமா என்று கேட்டேன் தெரியாது என்றார். பின் இலங்கை தேசிய கொடியைப்பற்றி விபரமாக கூறினேன். தம்பி மன்னித்துக் கொள்ளுங்கள். நான் தெரியாமல் செய்து விட்டேன். எனக்கு இப்போது 65 வயது இது வரைக்கும் எனக்கு தெரியாது இனிமேல் இலங்கை தேசிய கொடிக்கு எனது முழுமையான மறியாதை கிடைக்கும் இதை மற்றவர்களுக்கும் சொல்லி கொடுக்கின்றேன் என்றார். அப்படி என்றால் இது வரை காலமும் இவருக்கு தேசிய கொடிபற்றி தெரியாமல் இருப்பதற்கு யார் காரணம். பிரகு அவரிடம் இருந்து அந்த தேசிய கொடி என்னால் பெற்றுக் கொள்ளபட்டு பாதுகாப்பாக வைக்கபட்டள்ளது. அவருக்கு உடுத்த வேட்டி ஒன்றும் வழங்கபட்டது. அவர் மிகவும் சந்தோசத்துடன் வாங்கிக் கொண்டு மீண்டும் மன்னிப்பு கேட்டு சென்றார்.

http://mrssweepstakes.com/author/admin/ உண்மையாகவே இந்த நபரை யாரும் குற்றம் சொல்ல முடியாது. இது அவரின் அறியாமை. நிலமையை எடுத்துக் கூறியதும் அவர் விழிப்படைந்தார். தேசிய கொடியும் பாதுகாக்கபட்டுவிட்டது. இருந்தும் இந்த விடயத்தைப்பற்றி நான் ஏன் வெளி கொண்டு வருகின்றேன் என்றால். இனியும் இவ்வாறு வேறு எங்கும் நடக்க கூடாது என்பதற்காக. இந்த நாட்டில் வாழும் ஒவ்வொறுவரும் நாட்டுக்கும் நாட்டின் தேசிய கொடிக்கும் நாட்டின் இறைமைக்கும் நாட்டின் சட்டதிட்டத்திற்கும் கட்டுபட்டவர்களாக இருக்க வேண்டும் அப்போது தான் நாட்டில் ஜனநாயகம் நிலைக்கும். அதுவே நாம் நம் பிள்ளைகளுக்கு விட்டு செல்லும் சொத்துகளை விட பெரிய சொத்தாக அமையும்.

 

Leave a Reply

error: Content is protected !!