மக்களுக்கு சேவை செய்ய அரசியல் தேவையில்லை. இதனால் அரசியலுக்கு நான் ஒரு போதும் வர மாட்டேன் – ஹட்டனில் கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரன்….

மக்களுக்கு சேவை செய்ய அரசியல் தேவையில்லை. இதனால் அரசியலுக்கு நான் ஒரு போதும் வர மாட்டேன் – ஹட்டனில் கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரன்….

மக்களுக்கு சேவை செய்ய அரசியல் தேவையில்லை. இதனால் அரசியலுக்கு நான் ஒரு போதும் வரவும் மாட்டேன். எனக்கு அரசியலில் அனுபவமும் இல்லை. எங்களது அமைப்பின் ஊடாக மக்களுக்காக தொடர்ந்தும் சேவையை செய்வேன் என கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரன் தெரிவித்தார்.அட்டனில் 05.01.2019 அன்று மாலை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது,

மக்களின் கஷ்டங்களை உணர்ந்து அவர்களின் தேவையை எங்காளல் முடிந்தவரை பூர்த்திசெய்வோம். கடந்த காலங்களில் இடம்பெற்ற அரசியல் குழப்பநிலை தொடர்பாக நான் விமர்சிக்க விரும்பவில்லை.

தோட்ட தொழிலாளர்களின் சம்பள உயர்வு தொகையாக ஆயிரம் ரூபாவை விட அதற்கு அதிகமாக வழங்க வேண்டும். இது என்னுடைய எதிர்பார்ப்பாகும். தற்போது வழங்கும் தொகை தோட்ட தொழிலாளர்களுக்கு போதுமானது அல்ல. இதனால் தொழிற்சங்கவாதிகள் மற்றும் அரசியல்வாதிகள் தொழிலாளர்கள் படும் கஷ்டங்களை புரிந்து கொண்டு சம்பள உயர்வை பெற்றுக் கொடுக்க வேண்டும்.

தோட்ட தொழிலாளர்களின் சம்பள உயர்வை பெற்றுக்கொடுப்பதற்கு எங்களின் ஆதரவும் என்றும் இருக்கும்.

தொழிலாளர்களை பணிபகிஷ்கரிப்பு மற்றும் ஹர்த்தாலில் ஈடுப்படுத்த வேண்டாம். அவர்களின் பணிகளை தடை இல்லாமல் முன்னெடுக்க வேண்டும். அவ்வாறு முன்னெடுக்கப்படுமாயின் அவர்களுக்கு தேவையானவற்றை பூர்த்தி செய்து கொள்ள முடியும்.

சம்பள பிரச்சினை ஏற்படும் பட்சத்தில் தொழிலாளர்களை தொழிலுக்கு செல்ல வேண்டாம் என சொல்பவர்களால் அவர்களின் நாள் சம்பளத்தை கொடுக்க முடியுமா ? முடியாது. இதனால் கடைசியில் பாதிப்படைவது தொழிலாளர்கள் தான். எனவே இதற்கு உரிய தீர்வு பெற்றுக்கொடுக்க வேண்டும்.

20 வருட காலமாக எங்களின் இலங்கை கிரிக்கெட் அணி முதலாம், இரண்டாம் இடங்களை தக்க வைத்திருந்தது. கடந்த மூன்று வருட காலமாக இலங்கை கிரிக்கெட் அணியினர் சாதனைகள் எதுவும் படைக்கவில்லை. இதற்கு காரணம் என்னவென்று தெரியவில்லை. ஆராய்ந்து தான் பார்க்க வேண்டும்.

இலங்கை கிரிக்கெட் அணியின் முகாமைத்துவத்தை மாத்திரம் குறை கூற முடியாது. அணியின் வீரர்களும் இதற்கு பொறுப்பு கூற வேண்டும்.

இலங்கை கிரிக்கெட் அணியினருக்கு பண தட்டுப்பாடு இல்லை. இதனால் எவ்வாறு கிரிக்கெட் வீரர்களின் அளுமையை மற்றும் திறன்களை விருத்தி செய்து 20 வருட வெற்றி பயணத்தை மீண்டும் பெற்றுக் கொள்வதற்கு அணைவரும் ஒன்றிணைந்து முயற்சிக்க வேண்டும் என்றார்.

எஸ். சதீஸ் ,க.கிஷாந்தன்

 507 total views,  6 views today

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )
mersin escort mersin escort mersin escort mersin escort mersin escort mersin escort kayseri escort konya escort malatya escort malatya escort erotik film film izle komedi film izle
error: Content is protected !!