முகப்புஎம்மை பற்றிவிளம்பரம்செய்திகள்தொடர்பு
Home > Slider > அரசாங்கம் வைத்த அரசியல் பரீட்சையின் பின்னணி குறித்து வெளிப்படுத்தும் திலகர் எம்.பி!!

அரசாங்கம் வைத்த அரசியல் பரீட்சையின் பின்னணி குறித்து வெளிப்படுத்தும் திலகர் எம்.பி!!

அரசாங்கத்தால் வைக்கபட்ட பரீட்சையானது மக்கள் சேவைக்காக ஒரு இடத்தில் நின்று நிலைப்பது யார் மக்கள் பெயரை சொல்லி அங்கும் இங்கும் பாய்பவர்கள் யார் என்பதற்கான பரீட்சை என்கிறார் நுவரெலியா மாவட்ட எம்.பி. எம்.திலகராஜ்

கடந்த ஜம்பது நாட்கள் அரசாங்கத்தால் ஒரு பரீட்சை வைத்தார்கள் அந்த பரீட்சையானது ஒரு இடத்தில் நின்று நிலைப்பது யார் மக்கள் பெயரை சொல்லி அங்கும் இங்கும் பாய்பவர்கள் யார் என்பதற்கான ஒரு பரீட்சையே கடந்த 50 நாட்களாக அரசாங்கத்தால் வைக்கபட்டது.

அந்த பரீட்சைதான் பச்சை தமிழன் சிவப்பு தமிழன் இந்தபக்கம் இருந்தால் பச்சை தமிழன் அந்தபக்கம் இருந்தால் சிவப்பு தமிழன் என ஏகபட்ட தமிழர்களை இனம்கண்ட போது எங்களை நோக்கி கோடி கணக்கான நிதிகள் வந்தது அதில் எனக்கு இத்தனை கொடி தலைவருக்கு இத்தனை கோடி அமைச்சில் பதவி வந்தது.

ஆனால் நாங்கள் அதனை எங்களுக்கு கிடைக்கின்ற கோடிகளாக பார்க்கவில்லை எங்கள் மக்களின் பெருமதியாகத்தான் பார்த்தோம் என நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் மயில் வாகனம் திலகராஜ் தெரிவித்தார். தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவரும் அமைச்சருமான பழனி திகாம்பரம் அவர்களின் 52வது பிரந்த தினத்தை முன்னிட்டு போகாவத்தை தோட்ட பகுதியில் 55தனி வீட்டு திட்டத்தினை மக்கள் பாவனைக்கு கையளிக்கும்
நிகழ்வில் கலந்து கொண்டு உறையாற்றிய போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இந் நிகழ்வில் மேலும் உறையாற்றிய நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உருப்பினர்
மயில்வாகனம் திலகராஜ்

எங்கள் மக்களின் பெறுமதியை நாங்கள் குறைத்து பார்த்தது இல்லை எங்கள்
மக்களின் சேவைகளை பெற்று கொடுப்பதற்காக நாங்கள் கடந்த காலங்களில் பெற்று
கொண்ட சேவையினை கௌரவிப்பதற்காக நாங்கள் அந்த இடத்தை விட்டு நகராமல்
இருந்தோம் ஜனநாயகமாக சேவையாற்றி இருக்கின்றோம்.

ஜனநாயகத்தின் பக்கம் நின்று நாங்கள் வென்று எடுத்து இருக்கின்றௌம் என்ற அடிப்படையில் வென்று விட்டு மீண்டும் எங்கள் வேலைத்திட்டத்தினை எங்கள் தலைவரின் பிறந்த
தினத்தை முன்னிட்டு ஆரம்பித்து இருக்கின்றோம் இந்த வீடமைப்பு திட்டம் போகாவத்தை நகரபகுதிக்கு அன்மையில் உள்ள வீதியின் அருகாமையிலே அமைய பெற்று
இருக்கிறது.

இந்த வீட்டுத்திட்டத்தை கௌரபடுத்த வேண்டும் இந்த பகுதிக்கு
சேவையாற்றியவர்களை கௌரபடுத்த வேண்டும் என்ற அடிப்படையிலே ஒரு காலத்திலே
ஸ்டொனிக்கிளிப் தோட்டபகுதியில் பிறந்து இந்த பகுதி மிகவூம் பின்தங்கிய
பகுதியாக இருந்த சந்தர்பத்தில் இங்குள்ள மாணவர்களுக்கு கெலிவத்தை
பாடசாலையின் மாணவர்களின் ஊடாக அறியபல சேவைகளை செய்த கலை இலக்கிய
பண்பாட்டு துறையில் பல சேவைகளை செய்த எல்லோருக்கும் அறிந்த விபத்தின்
ஊடாக மரணமடைந்த ஆசிரியர் இராமகிருஸ்னண் அவர்களின் பெயரை இன்று முதல்
இராமகிருஸ்னண் புறம் என பெயரில் இந்த கிராமம் அழைக்கபடும்

எனவே இவ்வாறு மலையகததில் எங்கு பாரத்தாலும் சந்து பொந்து இங்கு ஈடுக்கு
எல்லாம் தொண்டமான் என்று இல்லாமல் அங்காங்கே மக்களுக்காக யார் யார்
சேவையாற்றினார்களோ அவர்களை கௌரவிக்கும் நிகழ்ச்சி திட்டத்தை தொடர்ச்சியாக
முன்னெடுப்பதற்க்கு மலைநாட்டு புதிய கிராமங்கள் அமைச்சர் முன்னின்று
செயல்படுவார்.

எங்கள் தலைவரின் பிறந்த தினம் 52வது அதனை குறிப்பதற்க்கு நாங்கள் வீடுகளை திறந்து வைக்கும் என்னிக்கை 104 அதனை நான் சொல்லவருவது அநிதியான முறையில் ஆட்சியினை பிடிக்க நேர்ந்தால் நாங்கள் முதலில் இருண்டு வருடங்களில் செய்ததை விட இன்னும் மேலதிகமாக இரு மடங்காக சேவைகளை செய்வதற்காகத்தான் நாங்கள் வந்திருக்கின்றோம் இந்த 50நாள் அரசியல் வந்த பிறகு நாங்கள் எல்லாம் கவலை பட்டது இந்த வீடமைப்பு திட்டங்களுக்கு என்ன நடக்கபோகிறது  ஏன் என்றால் இந்த போகாவத்தை பகுதி எத்தனை மக்கள்
வாழுகின்ற பகுதி ஆனால் இந்த பிரதேசத்தில் இந்த போகாவத்தை வீதி அருகே இந்த
வீட்டுத்திட்டத்தை மக்கள் பெற்று கொள்கின்றார்கள் என்றால் அது அமைச்சர் திகாம்பரம் காலத்தில் மாத்திரம் தான் நடந்து இருக்கிறது.

என்பதற்கு சாட்சி தான் இது அவர்கள் அமைச்சரானதும் தெரியூம் வாகனம் வரும் ஆனால் சத்தம்
வராது ஆனால் எங்கள் அமைச்சர் ஒரு வாகனத்தில் மாத்திரம் தான் வருவார். அவருக்கு 14வாகனம் கிடையாது அவ்வாறு 15வாகனங்களில் செல்கிறவர்களுக்கு இந்த இடது பக்கத்தை பார்ப்பதற்க்கு கஸ்டமாகத்தான் இருக்கும் ஏன் ஏன்றால் இது அனைத்தும் அமைச்சர் திகாம்பரம் அவர்களால் கட்டபட்ட வீடுகள் என மனதில் உருத்தி கொண்டே இருக்கும் என குறிப்பிட்டார்.

 

(பொகவந்தலாவ நிருபர் எஸ்.சதீஸ்)

Leave a Reply

error: Content is protected !!