முகப்புஎம்மை பற்றிவிளம்பரம்செய்திகள்தொடர்பு
Home > Slider > அரசியலில் பொறுமையாக இருந்து முடிவெடுக்க வேண்டும் – அமைச்சர் இராதாகிருஷ்ணன் தெரிவிப்பு!!

அரசியலில் பொறுமையாக இருந்து முடிவெடுக்க வேண்டும் – அமைச்சர் இராதாகிருஷ்ணன் தெரிவிப்பு!!

பலரும் எனக்கு அமைச்சு பதவி கிடைக்காது எனவும் அதற்கு ஆப்பு வைக்கப்பட்டு விட்டதாகவும் கூறிவந்தார்கள். ஆனால் நான் பொறுமையாக இருந்த காரணத்தால் இன்று எனக்கு நல்லதொரு அமைச்சு கிடைத்திருக்கின்றது. எனவே இது எனது பொறுமைக்கு கிடைத்த ஒரு வெற்றியாகும். என்றுமே அரசியலில் பொறுமையாக இருந்து முடிவெடுக்க வேண்டும் என்பதற்கு இது ஒரு சிறந்த உதாரணமாகும்.நான் பொறுத்திருந்து பெற்றுக் கொண்டுள்ள அமைச்சானது ஏங்களுடைய மலையக மக்களுக்கு சேவை செய்யக்கூடிய வகையில் அமைந்துள்ளது. இதனையே நான் எதிர்பார்த்தேன். ஏனென்றால் கடந்த காலங்களில் நாங்கள் நாடு பூராகவும் சென்று வேலை செய்தேன். ஆனால் தற்பொழுது இந்த அமைச்சின் மூலமாக பெருந்தோட்ட பகுதிகளில் பாதை அபிவிருத்தி, பாடசாலைஅபிவிருத்தி, சுகாதாரம், ஆலயங்களுக்கான அபிவிருத்தி சிறுவர் மகளிர் விவகாரம் தொடர்பான அபிவிருத்தி ஆகியவற்றை முன்னெடுத்து செல்ல முடியும்.

இதனை முழுமையாக பயன்படுத்தி அபிவிருத்திகளை செய்வேன் என மலையக மக்கள் முன்னணியின் தலைவரும் தமிழ் முற்போக்கு கூட்டணியின் பிரதி தலைவரும்,விசேட பிரதேசங்களுக்கான அபிவிருத்தி அமைச்சர் கலாநிதி வேலுசாமி இராதாகிருஸ்ணன் தெரிவித்துள்ளார்.

மலையக பகுதிகளில் முன்னெடுக்கப்பட வேண்டிய அபிவிருத்திகள் தொடர்பான கலந்துரையாடல் கூட்டம் ஒன்று 14.01.2019 அன்று திங்கட்கிழமை நுவரெலியா மாவட்ட செயலகத்தில் அமைந்துள்ள அமைச்சரின் காரியாலயத்தில் இடம்பெற்றது.

இந்த கலந்துரையாடலில் முன்னாள் மத்திய மாகாண சபை உறுப்பினரும் மலையக மக்கள் முன்னணியின் தேசிய அமைப்பாளருமான ஆர்.ராஜாராம், மலையக மக்கள் முன்னணியின் பொருலாளரும் பேராசியருமான எஸ்.விஜேசந்திரன், உப தலைவர்களான கிருஸ்ணன்,ஜெயபாரதி,மலையக தொழிலாளர் முன்னணியின் செயலாளர் சுப்பிரமணியம்,மலையக தொழிலாளர் முன்னணியின் நிதிச் செயலாளர் விஸ்வநாதன் புஸ்பா பிரதேச சபை உறுப்பினர்கள் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.

தொடர்ந்து அங்கு உரையாற்றிய மலையக மக்கள் முன்னணியின் தலைவரும் தமிழ் முற்போக்கு கூட்டணியின் பிரதி தலைவரும்,விசேட பிரதேசங்களுக்கான அபிவிருத்தி அமைச்சர் கலாநிதி வேலுசாமி இராதாகிருஸ்ணன்,

எனக்கு கிடைத்திருக்கின்ற இந்த அமைச்சின் மூலமாக பெருந்தோட்ட பகுதிகளுக்கும் கிராமங்களுக்கும் நகர் புறங்களுக்கும் அபிவிருத்திகளை மேற்கொள்ள முடியும்.எங்களுடைய மக்கள் இந்த அனைத்து பகுதிகளிலும் வாழந்து வருகின்றார்கள்.குறிப்பாக சுகாதாரம்,கல்வி,பாதை அபிவிருத்தி,ஆலய அபிவிருத்தி மற்றும் சிறுவர் மகளிர் விவகாரம் ஆகிய துறைகளில் நிலவுகின்ற குறைபாடுகள் தொடர்பாக விசேட கவனம் செலுத்தப்படும்.

என்னை பொறுத்த வரையில் நான் எந்த ஒரு காலத்திலும் இனம் மதம் எந்த ஒரு வித்தியாசமும் பார்த்தது இல்லை.அதன் காரணமாகவே எனக்கு அனைத்து மக்களும் நுவரெலியா மாவட்டத்தில் வாக்களித்தார்கள்.நான் கல்வி இராஜாங்க அமைச்சராக இருந்த காலத்திலும் எந்த ஒரு வித்தியமும் பார்க்காமல் அனைவருக்கும் எனது சேவைகளை வழங்கியுள்ளேன்.அது போலவே இந்த அமைச்சின் மூலமாகவும் எனது சேவையை முன்னெடுப்பேன்.

நான் அமைச்சிப்பதவியை மாத்திரம் பெற்றுக் கொள்ள வேண்டும் என்று நினைத்திருந்தால் எப்போதோ அதனை பெற்றுக் கொண்டிருப்பேன்.ஆனால் எங்களுடைய மக்களுக்கு சேவை செய்யக் கூடிய வகையில் அமைச்சை பெற்றுக் கொள்ள வேண்டும் என்ற காரணத்தால் நான் பொறுமையாக இருந்தேன்.அதற்கு ஏற்றவாறு பிரதமர் ரணில் விக்கிரமசிங்ஹ எனக்கு தற்பொழுது விசேட பிரதேசங்களுக்கான அபிவிருத்தி அமைச்சி என்ற ஒன்றை ஏற்படுத்தி வழங்கியிரக்கின்றார்.இதன் மூலமாக எங்களுடைய மக்களுக்கான சேவையை முன்னெடுக்க முடியும் என்று நான் எதிர்பாரக்கின்றேன் என்றார்.

 

(க.கிஷாந்தன்)

Leave a Reply

error: Content is protected !!