முகப்புஎம்மை பற்றிவிளம்பரம்செய்திகள்தொடர்பு
Home > Slider > இலங்கை வனப்பகுதிகளில் பலவகையான பூச்சி புழுக்களை பிடித்த வெளிநாட்டவர் ஐவர் கைது!

இலங்கை வனப்பகுதிகளில் பலவகையான பூச்சி புழுக்களை பிடித்த வெளிநாட்டவர் ஐவர் கைது!

இலங்கையின் வனப்பகுதிகளில் பிடிக்கப்பட்ட பாரிய அளவு தொகையிலான பூச்சிகளுடன், ஐந்து வெளிநாட்டவர்கள் கலவான வன பாதுகாப்பு அதிகாரிகளினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ச்லோவாக்கியா நாட்டை சேர்ந்த அவர்கள், சிங்கராஜ வனத்தை அண்டியுள்ள கலவான பிரதேசத்தில் தனியார் விடுதி ஒன்றில் தங்கிருந்து நான்கு நாட்களுக்கு முன்னர் இந்த பூச்சிகளை பிடித்துள்ளனர் என விசாரணை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அவர்களினால் வண்ணத்துப்பூச்சிகள் உள்ளிட்ட சில பூச்சி வகைகள் பெருமளவில் பிடிக்கப்பட்டுள்ளன.

இவ்வாறு பூச்சி வகைகள் பாரியளவில் பிடிக்கப்பட்ட முதலாவது சந்தர்ப்பம் இதுவாகும் என கலவான வன பாதுகாப்பு அதிகாரி ஆர்.எம்.எல்.எம்.ரத்னவீர தெரிவித்துள்ளார்.

கைது செய்யப்பட்ட குறித்த ச்லோவாக்கியா பிரஜைகள் ஐவரும் இரத்தினபுரி பதில் நீதவான் முன்னிலையில் பிரசன்னப்படுத்தப்பட்டபோது, அவர்களை எதிர்வரும் 6ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

(க.கிஷாந்தன்)

Leave a Reply

error: Content is protected !!