முகப்புஎம்மை பற்றிவிளம்பரம்செய்திகள்தொடர்பு
Home > Slider > பரீட்சை ஆணையாளருக்கு முறைப்பாடு…..

பரீட்சை ஆணையாளருக்கு முறைப்பாடு…..

வினாத்தாள்களை மாற்றிக்கொடுத்த பரீட்சை மேற்பார்வையாளர்களின் கவனயீனத்தால் உள ரீதியாக பாதிப்படைந்த அதிபர் தரம் 111 போட்டி பரிட்சைக்கு தோற்றிய அதிபர்களுக்கு உரிய தீர்வினை பெற்றுக்கொடுக்க வேண்டுமென பரிட்சைகள் ஆணையாளருக்கு முறைபாடொன்று செய்யப்பட்டுள்ளதாக இலங்கை கல்விச்சமூக சம்மேளனத்தின் செயலாளர் ஆர் .மணிவண்ணன் தெரிவித்தார்.

அதிபர் தரம் 111 க்கான போட்டி பரீட்சையில்    நுவரெலியா குட்சபட் கென்வென்ட மண்டபத்தில் பரீட்சைக்கு தோற்றிவர்களே இவ்வாறு பாதிப்டைந்துள்ளனர்
நேற்று 10.02.2019  காலை 09 மணிமுதல் மாலை 03.30 மணிவரை இடம்பெற்ற இப்போட்டிபரீட்சையில் மூன்று பரீட்சைகள் இடம்பெற்றுள்ளது.  இதன் போது முதலாவது  கிரகித்தல் போட்டி பரீட்சையும் அரை மணித்தியாலயம் இடைவேலையும் இரண்டாவதாக சம்பவகற்கை,  ஒன்றறை மணித்தியாலயம் இடைவேலையும்  மூன்றாவதாக  பொதுஅறிவு மற்றும் , நுன்னறிவு போட்டி பரீட்சைகள் இடம்பெற்ற வேண்டி நிலையில், பரீட்சை நிலைய மேற்பார்வையாளர்களின் அசமந்த போக்கால் மூன்றாவது  போட்டி பரீட்சைக்கான விடை தாள்கள் முதலாவதாக பரீட்சார்த்திகளுக்கு வழங்கப்பட்டுள்ளது.
இந் நிலையில் போட்டிப்பரிட்சை மேற்பார்வையாளர்களினால் பரீட்சைக்கு தோற்றியவர்களை இடைவேளை கொடுக்காது  மண்டபத்தை விட்டு வெளியேற விடாது  மூன்று பரீட்சைகளுக்கும்  தோற்றுவிக்க செய்துள்ளனர்,
பரீட்சை மேற்பார்வையாளர்களின் இந் நடவடிக்கையால் பரீட்சார்த்திகள்  உள ரீதியாக பாதிப்படைந்து அசௌகரியங்களுக்கு உள்ளானதாக இலங்கை கல்விச்சமூக சம்மேளனத்தின் செயலாளரிடம் பாதிப்படைந்த பரீட்சார்த்திகள் முறைப்பாடு செய்ததையடுத்து உடனடியாக தொலை நகல் மூலம்  , உள ரீதியாக பாதிப்படைந்த பரீட்சார்த்திகளுக்கு உரிய தீர்வை பெற்றுக்கொடுக்க கோரியும் அசமந்தபோக்கை கடைபிடித்த பரீட்சை மேற்பார்வையாளர்களுக்கும் நடவடிக்கை எடுக்க கோரியும் முறைப்பாடு மகஜரொன்றை பரீட்சைகள் ஆணையாளருக்கு அனுப்பி வைத்துள்ளதாக ஆர்.மணிண்ணன் தெரிவித்தார்
நோட்டன்  பிரிட்ஜ்  நிருபர்   எம் கிருஸ்ணா

 

 

Leave a Reply

error: Content is protected !!