முகப்புஎம்மை பற்றிவிளம்பரம்செய்திகள்தொடர்பு
Home > Slider > எதிர்வரும் தேர்தல்களில் ஐக்கிய தேசிய கட்சியின் வாக்கு வங்கி சரிவடையும் – இராதாகிருஷ்ணன் தெரிவிப்பு!!

எதிர்வரும் தேர்தல்களில் ஐக்கிய தேசிய கட்சியின் வாக்கு வங்கி சரிவடையும் – இராதாகிருஷ்ணன் தெரிவிப்பு!!

நுவரெலியா மாவட்ட வீதி அபிவிருத்தி அதிகார சபையின் நடவடிக்கையால் எதிர்வரும் தேர்தல்களில் ஐக்கிய தேசிய கட்சியின் வாக்கு வங்கி சரிவடையும் வாய்ப்பு இருப்பதாக மலையக மக்கள் முன்னணியின் தலைவரும், தமிழ் முற்போக்கு கூட்டணியின் பிரதி தலைவரும், விசேட பிரதேசங்களுக்கான அபிவிருத்தி அமைச்சருமான வேலுசாமி இராதாகிருஸ்ணன் தெரிவித்தார்

அம்பகமுவ பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழு கூட்டம் 11.02.2019 அன்று அம்பகமுவ கேட்போர் கூட மண்டபத்தில் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், அபிவிருத்தி குழுவின் இணைத்தலைவர்களான கே.கே.பியதாஸ, அமைச்சர் வே.இராதாகிருஷ்ணன் தலைமையிலும், பிரதேச செயலாளரின் வழிகாட்டலிலும் இடம்பெற்றது.

இதன்போது அமைச்சர் கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது,

நுவரெலியா மாவட்ட வீதி அபிவிருத்தி அதிகார சபை செயற்பாடுகள் மிகவும் பின்தங்கிய நிலையில் இருப்பதாகவும் வீதி அபிவிருத்தி அதிகார சபை நுவரெலியா மாவட்டத்திற்கு மாற்றான்தாய் மனப்பாங்குடன் வேலை செய்து வருவதுடன் வீதி அபிவிருத்திக்காக பல்வேறு இடங்களிலும் அடிக்கல் நாட்டப்பட்டு இருந்த வேலைத்திட்டங்கள் பூர்த்தி செய்யப்படாமல் இருககின்றது.

பல பாதைகள் நுவரெலியா மாவட்டத்தில் மிகவும் மோசமாக இருப்பதாகவும் இந்த பாதைளை அபிவிருத்தி செய்யுமாறு பொதுமக்கள் பல முறை கோரிக்கை விடுத்திருப்பதாகவும் அந்த கோரிக்கைகளை கருத்திற்கொண்டு வீதி அபிவிருத்தி அதிகார சபையின் கவனத்திற் கொண்டு வந்த போதிலும் தொடர்ந்தும் வீதி அபிவிருத்தி அதிகார சபையினர் மாற்றான்தாய் மனப்பாங்குடன் செயற்பட்டு வருகின்றனர்.

இது எதிர்வரும் தேர்தலில் ஐ.தே.கட்சியின் வீழ்ச்சிக்கு ஒரு காரணமாக அமையலாம் எனவும், இது தொடர்பாக சம்மந்தப்பட்ட அமைச்சர்களும், அதிகாரிகளும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையையும் முன்வைத்துள்ளார்.

ஒக்டோபர் 26ம் திகதி ஏற்பட்ட ஆட்சி மாற்றம் காரணமாக அம்பகமுவ பிரதேசத்திற்கு அபிவிருத்திக்காக ஒதுக்கப்பட்டு இருந்த 66.5 மில்லியன் நிதி திறசேரியினால் மீள பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.

இது 52 நாள் அரசாங்கத்திற்கு கிடைத்த வெற்றியாக கருதுவதாகவும், அதனால் பாதிக்கப்பட்டவர்கள் பொது மக்களே என்பதையும் இதன்போது சுட்டிக்காட்டினார்.

 

(க.கிஷாந்தன்)

Leave a Reply

error: Content is protected !!
mersin escort mersin escort mersin escort mersin escort mersin escort mersin escort mersin escort kayseri escort konya escort konya escort malatya escort malatya escort erotik film film izle komedi film izle