முகப்புஎம்மை பற்றிவிளம்பரம்செய்திகள்தொடர்பு
Home > Slider > பிரதமரின் ஆலோசனைக்கு அமைய பஸ்சறை பிரதேசத்தின் குப்பைகளை அகற்ற நடவடிக்கை!!

பிரதமரின் ஆலோசனைக்கு அமைய பஸ்சறை பிரதேசத்தின் குப்பைகளை அகற்ற நடவடிக்கை!!

அண்மை காலமாக பஸ்சறை பிரதேசத்திற்கு உட்பட்ட பிரேச கழிவுகளை அகற்றுவதில் பிரதேச சபை பல்வேறு சிக்கல்களை எதிர்நோக்கி வந்தது. இதனால் பல்வேறுப்பட்ட நோய்களும் சமூக பிரச்சனைகளும் ஏற்பட்டு வந்தன. 

இந்த பிரச்சனைகளுக்கு உரிய தீர்வினை பெற்றுக் கொடுக்கும் நோக்கில் பஸ்சரை ஐக்கிய தேசிய கட்சியின் அமைப்பாளரும் பெருந்தோட்ட கைத்தொழில் இராஜாங்க அமைச்சரும் இலங்கை தேசிய தோட்ட தொழிலாளர் சங்கத்தின் பொது செயலானருமான வடிவேல் சுரேஸ் பிரதமர் ரனில் விக்ரமசிங்க அவர்களுடன் பேசி “எமது நகரை சுத்தமாக வைத்திருப்போம்” என்ற செயற்திட்டத்தின் கீழ் உள்ளக¸ உள்நாட்டு அலுவல்கள்¸ மாகாண சபைகள் மற்றும் உள்ளுராட்சி அமைச்சின் ஊடாக குப்பை அகற்றும் இயந்திரம் ஒன்றினை பிரதேச சபைக்கு பெற்றுக் கொடுத்து உள்ளார்.

இதனை பிரதேச சபையின் தலைவரிடம் கையளிக்கும் நிகழ்வு பிரதேச சபை வளாகத்தில் நடைபெற்றது. (11.02.2019) இதன் போது அனைத்து பிரதேச சபை உறுப்பினர்களும் பொது மக்களும் கலந்துக் கொண்டதுடன் இராஜாங்க அமைச்சர் வடிவேல் சுரேஸ் அவர்கள் குப்பை அகற்றும் வாகனத்தை வெள்ளோட்டமாக நகர் வழியாக செலுத்தியமை ஒரு சிறப்பு அம்சமாகவும் காணப்பட்டது.

 

நீலமேகம் பிரசாந்த்

Leave a Reply

error: Content is protected !!