முகப்புஎம்மை பற்றிவிளம்பரம்செய்திகள்தொடர்பு
Home > Slider > பொகவந்தலாவ ரொப்கில் தோட்டத்தில் சிறப்பாக இடம்பெற்ற கொழுந்து பறிக்கும் போட்டி!!

பொகவந்தலாவ ரொப்கில் தோட்டத்தில் சிறப்பாக இடம்பெற்ற கொழுந்து பறிக்கும் போட்டி!!

ஹேலிஸ் நிறுவனத்தில் கீழ் இயங்கும் களனிவெளி தலவாக்கலை ஹோரன ஆகிய பெருந்தோட்டங்களில் இயங்கும் தோட்டபகுதிகளில் உள்ள பெண் தொழிலாளர்களை ஊக்குவிக்கும் முகமாக கடந்த வாரத்தில் இருந்து இந்த கொழுந்து பறிக்கும் போட்டி சிறப்பான முறையில் ஒவ்வரு தோட்டபகுதிளிலும் இடம் பெற்று வருகிறது

இந்த போட்டியின் இறுதி போட்டி எதிர்வரும் மாதகாலபகுதியில் நானுஒயா ரதல்ல பகுதியில் நடாத்துவதற்க்கு ஏற்பாடு செய்யபட்டுள்ளது. அந்தவகையில் அட்டன் பகுதியில் உள்ள களனிவெளி பெருந்தோட்ட நிறுவனத்தின் கீழ் அட்டன் பகுதிகளில் உள்ள ஏழு தோட்டபகுதிகளிலும் இந்த போட்டி இடம் பெற்று வருகிறது இந் நிலையில் ஐந்தாவது போட்டியாக களனிவெளி பெருந்தோட்ட நிறுவனத்திற்குட்பட்ட பொகவந்தலாவ ரொப்கில் தோட்டத்தில் சிறந்த கொழுந்து பறிப்பாளர்களுக்கான
போட்டி 13.02.2019.புதன்கிழமை தோட்டமுகாமையாளர் தலைமையில் இடம் பெற்றது

இன்று இடம் பெற்ற போட்டியில் பொகவந்தலாவ சிங்காரவத்த ரொப்கில் வாணகாடு ஆகிய மூன்று பிரிவுகளில் இருந்து 09போட்டியாளர்கள் கலந்து கொண்டனர் இந்த போட்டிக்கு 30நிமிடங்கள் மாத்திரம் வழங்கபட்ட வேலையில் 09போட்டியாளர்களுள் 94புள்ளிகளை பெற்று எஸ்.கமலேஸ்வரி முதலாம் இடத்தையும் 93.66புள்ளிகளை பெற்று எஸ்.மஞ்சுலா இரண்டாம் இடத்தையும் 93.11புள்ளிகளை
பெற்று எஸ்.கோகிலவானி முன்றாம் இடத்தையும் பெற்றனர்.

இதன் போது இரண்டாம் மூன்றாம் இடத்தை பெற்ற போட்டியாளர்களுக்கு பதக்கங்களும் சான்றுதல்களும் வழங்கபட்டு பரிசில்களும் வழங்கி வைக்கபட்டதோடு முதலாம் இடத்தை பெற்ற
போட்டியாளருக்கு பதக்கம் மற்றும் சான்றுதல் வழங்கி வைக்கபட்டதோடு ஒரு நாள் சுற்றுலாவிற்க்கும் ஏற்பாடு செய்யபட்டுள்ளது அட்டன் பகுதியில் ஏழு தோட்டபகுதிகளிள் முதலாம் இடத்தை பெற்ற ஏழு போட்டியாளர்களும் இறுதி போட்டிக்கு தகுதி பெற்றுள்ளமை குறிப்பிடதக்கது.

DSC08204 DSC08209 DSC08228 DSC08229DSC08209

 

(பொகவந்தலாவ நிருபர் எஸ்.சதீஸ்)

Leave a Reply

error: Content is protected !!