தொழிலாளர்களின் நாட்சம்பளத்துடன் 50 ரூபாய் வழங்க அரசு முடிவு!!

தொழிலாளர்களின் நாட்சம்பளத்துடன் 50 ரூபாய் வழங்க அரசு முடிவு!!

தோட்டத் தொழிலாளர்களின் ஆயிரம் ரூபாய் சம்பளப் பிரச்சினைக்குப் பிரதமருடன் நடைபெற்ற நேற்றைய பேச்சுவார்த்தையில் தற்காலிகமாகத் தீர்வு காணப்பட்டுள்ளது. தொழிலாளர்களின் நாட்சம்பளத்துடன் 50 ரூபாய் கொடுப்பனவொன்றை அரசாங்கத்தின் சார்பில் பெற்றுக்கொடுக்க முடிவுசெய்யப்பட்டுள்ளது.

இந்தக் கொடுப்பனவை ஒரு வருட காலத்துக்கு வழங்கவுள்ளதாக பெருந் தோட்டக்கைத்தொழில் அமைச்சர் நவீன் திசாநாயக்க நேற்று (13) தெரிவித்தார். கூட்டு ஒப்பந்தத்துக்கு அப்பால் வரவு-செலவுத்திட்ட கொடுப்பனவாக 50 ரூபா வழங்கப்படுவதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.

தேயிலைச் சபையில் நேற்று நடைபெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் அமைச்சர் இந்தத் தகவலைத் தெரிவித்தார். பெருந்தோட்டக் கம்பனிகளுக்கும் தோட்டத் தொழிற்சங்கங்களுக்குமிடையில் செய்து கொள்ளப்பட்ட கூட்டு ஒப்பந்தத்தில் தோட்டத்தொழிலாளர்களின் அடிப்படைச் சம்பளத்தை 500 ரூபாவிலிருந்த 700 ரூபாவாக அதிகரிக்க இணக்கம் காணப்பட்டது. இது தவிரவும் விலைக்கான கொடுப்பனவாக 50 ரூபாவும் வழங்க அவர்கள் இணங்கியிருந் தனர். இரு தரப்புக்கும் இடையில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் அரசாங்கம் நடுநிலையா ளராகவே பங்கெடுத்ததாகவும் அவர் கூறினார்.

இவ்வாறான நிலையில் கூட்டு ஒப்பந்தத்தின் ஊடாக வழங்கப்பட்ட சம்பள அதிகரிப்பு போதுமானதாக இல்லையென கூட்டு ஒப்பந்தத்தில் கைச்சாத்திடாத, அரசாங்கத்துக்கு ஆதரவான தொழிற்சங்கங்கள் தெரிவித்தன.

இது தொடர்பில் அரசாங்கத்துக்கு ஆதரவு அமைச்சர் திகாம்பரம் மற்றும் மனோ கணேசன் ஆகிய தொழிற்சங்கத் தலைவர்கள் அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தியிருந்தனர். கூட்டு ஒப்பந்தத்துக்கு அப்பால் சென்று அரசாங்கத்தால் எந்தவொரு கொடுப்பனவையும் வழங்க முடியாது என்பதை நாம் அவர்களிடம் எடுத்துக் கூறியிருந்தோம்.நாட்டின் ஜனநாயகத்தைப் பாதுகாப்பதற்கு எம்முடன் இணைந்து செயற்பட்டு, எமது அரசாங்கம் உருவாவதற்கு உதவியவர்கள் என்ற ரீதியில் அமைச்சர்கள் திகாம்பரம், மனோ கணேசன் ஆகியோரின் கோரிக்கைக்கு செவிசாய்த்து பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு வழங்கப்படும் நாளாந்த சம்பளத்தில் 50 ரூபாவை மேலதிக கொடுப்பனவாக வழங்க தீர்மானித்துள்ளோம்.

இது வரவு-செலவுத்திட்டத்தின் ஊடாக அரசாங்கத்தினால் வழங்கப்படும் கொடுப்பனவாக அமையும். ஒரு வருடகாலத்துக்கு இக்கொடுப்பனவு வழங்கப்படுவதுடன், இதற்காக அரசாங்கம் 1.2 பில்லியன் ரூபாவை வரவு-செலவுத் திட்டத்தில் ஒதுக்க திட்டமிட்டுள்ளது.

பெருந்தோட்டத்துறையில் தேயிலைத் தோட்டங்களில் பணியாற்றும் 1,40,000 தொழிலாளர்களுக்கும் இந்த 50 ரூபா கொடுப்பனவு வழங்கப்படும். இதற்கான பணம் தேயிலை சபையின் நிதியத்திலிருந்து திறைசேரிக்கு கடனாக வழங்கப்படும். இப் பணத்தை திறைசேரி மீண்டும் தேயிலை சபைக்கு மீளச் செலுத்தவேண்டியிருக்கும் எனவும் அமைச்சர் குறிப்பிட்டார்.

இந்தக் கொடுப்பனவை எவ்வாறு வழங்குவது என்பது தொடர்பில் நிதியமைச்சருடன் கலந்துரையாடவிருப்பதாகவும், வரவு-செலவுத்திட்டம் நிறைவேற்றப்பட்ட பின்னர் இக் கொடுப்பனவு வழங்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.பெருந்தோட்டக் கம்பனிகளுக்கும், தொழிற்சங்கங்களுக்கும் இடையில் செய்துகொள்ளப்படும் கூட்டு ஒப்பந்தத்தை பாதிக்காத வகையில் அல்லது அதனை முறிக்காத வகையில் இந்தக் கொடுப்பனவு வழங்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

அதேநேரம், கூட்டு ஒப்பந்தம் செய்து கொள்ளப்படாத மூன்று மாத காலங்களுக்கும் நிலுவைச் சம்பளத்தை வழங்குமாறு தொழிற்சங்கங்கள் கோரவில்லை. அவ்வாறு கோருவது கேலிக்குரியது என்பதுடன், அவ்வாறான கோரிக்கைகளுக்காக தேயிலை சபையின் பணத்தை அரசாங்கம் வீணாக செலவழிக்க விரும்பவில்லை என்றும் தெரிவித்தார்.

கடந்த வருடம் ஒக்ேடாபர் மாதம் 15ஆம் திகதியுடன் காலாவதியான கூட்டு ஒப்பந்தம் கடந்த ஜனவரி 28ஆம் திகதியிலிருந்து அமுலுக்கு வரும் வகையில் கைச்சாத்திடப்பட்டுள்ளது. இலங்கை தொழிலாளர் காங்கிரஸ், இலங்கை தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கம் ஆகிய இரண்டு சங்கங்கள் மட்டுமே புதிய கூட்டு ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டன. மற்றைய தரப்பான தோட்டத் தொழிற்சங்கக் கூட்டுக்கமிட்டி கைச்சாத்திடுவதிலிருந்து விலகிக்ெகாண்டது.

தொழிலாளர்களின் சம்பளத்தை வெறும் 20 ரூபாய் அதிகரித்ததுடன், நிலுவைச் சம்பளம் வழங்கப்படாமல் மூன்று மாதகாலத்தை வீணடித்ததற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் கூட்டுககமிட்டி கைச்சாத்திட மறுத்துவிட்டது. அதேநேரம். அந்தச் சம்பள அதிகரிப்பு வெறும் கண்துடைப்பு என்றும் அதனை ஏற்றுக்ெகாள்ள முடியாது என்றும் தொழிலாளர்கள் சுட்டிக்காட்டித் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.

 266 total views,  4 views today

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )
mersin escort mersin escort mersin escort mersin escort mersin escort mersin escort kayseri escort konya escort malatya escort malatya escort erotik film film izle komedi film izle
error: Content is protected !!