முகப்புஎம்மை பற்றிவிளம்பரம்செய்திகள்தொடர்பு
Home > Slider > வீடமைப்பு திட்டத்திற்க்கு அடிப்படை வசதிகளுக்கு ஏற்றவாறு காணிகள் வழங்கபட வேண்டும்- தீ விபத்தில் பாதிக்கபட்ட மக்கள் கோரிக்கை

வீடமைப்பு திட்டத்திற்க்கு அடிப்படை வசதிகளுக்கு ஏற்றவாறு காணிகள் வழங்கபட வேண்டும்- தீ விபத்தில் பாதிக்கபட்ட மக்கள் கோரிக்கை

அம்பகமுவ பிரதேசசெயலாளர் பிரிவிற்குட்பட்ட டிக்கோயா போடைஸ் 30ஏக்கர் தோட்டபகுதியில் தீ விபத்தில் பாதிக்கபட்ட மக்களுக்கு வீட்டுத்திட்டத்தை மேற்கொள்ள அடிப்படை வசதிகளுக்கு ஏற்றவாறு காணி பெற்றுகொடுக்கபட வேண்டும் என டிக்கோயா போடைஸ் 30ஏக்கர் தோட்டத்தில் தீ விபத்தில் பாதிக்கபட்ட மக்கள் கோரியுள்ளனர்

கடந்த 2018ம் ஆண்டு டிசம்பர் மாதம் 29ம் திகதி விடியற்காலை 06.15மணி அளவில் டிக்கோயா போடைஸ்30 ஏக்கர் தோட்டபகுதியில் ஏற்பட்ட தீடிர் விபத்தினால் 24குடியிருப்புகளை கொண்ட லயன் தொகுதி முற்றாக எரிந்து சாம்பளாகியுள்ளது இதனால் 24குடியிருப்புகளில் உள்ள உடமைகள் அனைத்தும் எரிந்து சாம்பளாகி விட்டதாக பாதிக்கபட்ட மக்கள் மேலும் தெரிவித்தனர்
பாதிக்கபட்ட 24குடியிருப்புகளை சேர்ந்த மக்கள் கடந்த 50நாட்களாக போடைஸ் தோட்ட விளையாட்டு மைதனாத்தில் தற்காலிக கூடாரங்களில் தங்கவைக்கபட்டுள்ளனர்

இதேவேலை பாதிக்கபட்ட குடுப்பங்களுக்கு புதிய வீடமைப்பு திட்டத்தை அமைத்து கொடுக்க தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவரும் தமிழ் முற்போக்கு கூட்டணியின் பிரதிதலைவரும் மலைநாட்டு புதிய கிராமங்கள் தோட்ட உட்கட்டமைப்பு மற்றும் சமூதாய அபிவிருத்தி அமைச்சர் பழனி திகாம்பரம் அவர்களினால் வீடமைப்பு திட்டத்திற்கான நிதி ஒதுக்கிடு வழங்கபட்டுள்ளதாகவும் வீடமைப்பு திட்டத்தினை மேற்கொள்வதற்கான காணி சுமார் இரண்டு கிலோமீற்றர் தொலைவில் வழங்கபட்டுள்ளதாகவும் வழங்கபட்ட காணியில் எங்களுக்கான வீடமைப்பு திட்டத்தினை மேற்கொண்டால் எங்களுக்கான வைத்தியசாலை பாடசாலை போக்குவரத்து போன்ற வசதிகள் இன்றி பெரிதும் பாதிக்கபட நேரிடும் என பாதிக்கபட்டமக்கள் கவலை வெளியிட்டுள்ளனர்

தற்பொழுது மலையகத்தில் நிலவும் தொடர் பனியுடன் கூடிய காலநிலை காரணமாக குறித்த தற்காலிக கூடாரங்களில் தமது வாழ்க்கையினை மேற்கொள்ள பெரிதும் சிரமபடுவதாகவும் இந்த தற்காலிக கூடாரத்தில் தங்கியிருந்த குடும்பம் ஒன்றில் இருந்த முதியவர் ஒருவர் மரணம் அடைந்த சம்பவம் ஒன்று பதிவாகி 18நாட்கள் கடந்துள்ளதாகவும் பாதிக்கபட்ட மக்கள் மேலும் தெரிவித்தனர்

எனவே பாதிக்கபட்ட மக்களுக்கு வீடமைப்பு திட்டத்தினை மேற்கொள்ள அமைச்சர் பழனி திகாம்பரம் அவர்கள் தயார் நிலையில் இருக்கின்ற போதும் எங்களுக்காக வழங்கபட்ட காணியானது எங்களுக்கு அடிப்படை தேவைகளுக்கு ஏற்ற காணியை தோட்ட நிர்வாக வழங்க முன்வர வேண்டும் என பாதிக்கபட்ட மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

 

01 04 05 09 12

(பொகவந்தலாவ நிருபர் எஸ்.சதீஸ்)

Leave a Reply

error: Content is protected !!
mersin escort mersin escort mersin escort mersin escort mersin escort mersin escort mersin escort kayseri escort konya escort konya escort malatya escort malatya escort erotik film film izle komedi film izle