முகப்புஎம்மை பற்றிவிளம்பரம்செய்திகள்தொடர்பு
Home > Slider > போதைப்பொருள் பரிசோதனைக்கு தயாராகும் ஆறுமுகன் தொண்டமான்

போதைப்பொருள் பரிசோதனைக்கு தயாராகும் ஆறுமுகன் தொண்டமான்

கொக்கேய்ன் பரிசோதனைக்குத் தயாராக உள்ளதாக இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் ஆறுமுகன் தொண்டமான் தெரிவித்துள்ளார்.

போதைப் பொருளான கொக்கேய்ன் பாவிக்கு நாடாளுமன்ற உறுப்பினர்கள், அமைச்சர்கள் தொடர்பில் பிரதி அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க சர்ச்சைக்குரிய கருத்தை வெளியிட்டிருந்தார்.

இது குறித்து விசாரணை செய்ய லக்ஷ்மன் கிரியெல்ல தலைமையில் அமைக்கப்பட்டிருந்த விசேட குழுவுக்கும் தகவல்களை ரஞ்சன் ராமநாயக்க வழங்கியிருந்தார்.

இந்நிலையில், கொக்கேய்ன் பரிசோதனைக்கு தாம் தயாராகவுள்ளதாக இலங்கைத் தொழிலாளர் காங்கரஸின் தலைவர் ஆறுமுகன் தொண்டமான் தெரிவித்ததாக அக்கட்சியின் ஊடகப்பிரிவு நேற்று அறிக்கையொன்றை முகநூலில் பதிவேற்றியதாகவும், பின்னர் அந்த அறிக்கை நீக்கப்பட்டுள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.

Leave a Reply

error: Content is protected !!