முகப்புஎம்மை பற்றிவிளம்பரம்செய்திகள்தொடர்பு
Home > மலையகம் > 5 வருடத்திற்குள் எல்லோருக்கும் தனிவீடுகள்! : சிங்பொன்னையா

5 வருடத்திற்குள் எல்லோருக்கும் தனிவீடுகள்! : சிங்பொன்னையா

நான் எனது வாழ்க்கையை ஆரம்பித்ததே தொழிற்ச்சங்கத்தில்தான் இன்று 48 வருடங்கள் தொழிற்ச்சங்க பணிகளில் ஈடுபட்டு வருகின்றேன்.

பெருந்தோட்ட தொழிலாளர்களுக்காக உழைத்தவன் நான் அவர்களின் பிரச்சினைகளை நன்கு உணர்ந்தவன். அவர்களின் பிரச்சினைகளுக்கான பரிகாரமும் தெரிந்தவன் நான் என தொழிலாளர் தேசிய சங்கத்தின் மத்திய மாகாண சபை உறுப்பினர் சிங்பொன்னையா தெரிவித்துள்ளார்.

நேற்று இடம்பெற்ற ஊடகச் சந்திப்பொன்றின்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்,

20 வருடங்களுக்கு முன்பு சிங்பொன்னையா என்றால் தோட்ட துரை மார்களுக்கு மனதில் ஒரு பயம் இருந்தது. ஆனால் அந்த நிலமை இன்று மாறிக்கொண்டே செல்கின்றது.

தோட்ட நிர்வாகத்திற்கும் தோட்ட தொழிலார்களுக்கும் மத்தியில் நல்ல உறவு இருக்கின்ற படியினால் எல்லா விதமான பிரச்சினைகளும் இன்று சுமூகமான முறையில் தீர்க்கப்பட்டுவருகின்றது.

மக்கள் ஒரு மாற்றத்தை கொண்டுவரவேண்டுமென அவர்களாகவே தீர்மானித்து ஒரு பெரிய மாற்றத்தை கொண்டுவந்தார்கள்.

அரசாங்கம் மாறியது. மக்கள் ஏதோ சுதந்திரமாக இருக்கின்றார்கள் இருப்பினும் பல குறைகள் இருக்கத்தான் செய்கின்றது. ஒரேயடியாக பிரச்சினைகளை தீர்க்க முடியாது.

மலையகத்தை பொறுத்தவரையில் தனிவீட்டுப் பிரச்சினை 200 ஆண்டுகளாக தீர்க்கப்படாத பிரச்சினையாக இருந்தது. ஆனால் இன்று அமைச்சர் திகாம்பரம் தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சு பொறுப்பை ஏற்றவுடன் வீடுகள் கட்டிக் கொடுக்கப்படுகின்றன.

எங்கு பார்த்தாலும் வீடுகள் கட்டப்படுகின்றன. முன்பெல்லாம் ஒரு தேயிலை செடியை பிடுங்க கூட தோட்ட நிர்வாகம் அனுமதியளிக்கவில்லை. ஆனால் இன்று 7 பேர்ஜஸ் காணிக்கு சொந்தக்காரர்கள்.

12 இலட்சம் பெறுமதியான வீட்டுக்கு உரித்துடையவர்கள். வெகுவிரைவில் 5 வருடத்திற்குள் எல்லோருக்கும் தனிவீடுகள் அமைக்கும் திட்டம் கொண்டுவரப்படுகின்றது.

ஒரு பக்கம் அரசாங்கம் வீடுகள் அமைக்கின்றது. இன்னொரு பக்கம் மக்கள் வங்கிக் கடன்களை பெற்று வீடுகளை கட்டக்கூடிய பல திட்டங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன.

தீர்க்கப்படாத பிரச்சினைகளும், கரை புரண்டோடியுள்ள பல பிரச்சினைகளும் இன்று தீர்க்கப்பட்டு வருகின்றது. ஆகவே எந்த கட்சியில் இருந்தாலும் சரி நல்ல சந்தர்ப்பங்களை பயன்படுத்தி கொள்வோம். காற்றோ, மழையோ, வெயிலோ கட்சியை பார்த்து வருவதில்லை.

எனவே நீங்கள் ஐக்கியப் பட்டால் மாத்திரமே பிரச்சினைகளை தீர்த்துக்கொள்ள முடியும் என்றார்.

நோட்டன் பிரிட்ஜ் நிருபர் மு.இராமசந்திரன், கேதீஸ்

Leave a Reply

error: Content is protected !!