முகப்புஎம்மை பற்றிவிளம்பரம்செய்திகள்தொடர்பு
Home > Slider > தொழில் பெற்றுதருவதாக கூறி கொழும்புக்கு அழைத்து சென்ற 13வயது சிறுமி கர்ப்பம்- சந்தேக நபருக்கு விளக்கமறியல் பொகவந்தலாவையில் சம்பவம்

தொழில் பெற்றுதருவதாக கூறி கொழும்புக்கு அழைத்து சென்ற 13வயது சிறுமி கர்ப்பம்- சந்தேக நபருக்கு விளக்கமறியல் பொகவந்தலாவையில் சம்பவம்

பொகவந்தலாவை பிரதேசத்தில் உள்ள தோட்டபகுதி ஒன்றில் 13வயது சிறுமியை தொழிலுக்கு அழைத்து சென்ற நபர் ஒருவரால் கர்ப்பமாக்கபட்ட சம்பவம் தொடர்பில் சந்தேக நபர் ஒருவர் விளக்கமறியலில் வைக்கபட்டுள்ளதாக பேலியாகொட பொலிஸார் தெரிவித்தனர்

குறித்த சந்தேக நபர் 11.03.2019.திங்கள் கிழமை கொழும்பு அலுத்கடை நீதிமன்றில் முன்னிலை படுத்தபட்ட போது எதிர் வரும் 25ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு அலுத்கடை நீதவானால் உத்தரவு பிறப்பிக்கபட்டுள்ளது சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது பொகவந்தலாவ பகுதியில் உள்ள தோட்டபகுதி ஒன்றில் உள்ள 13வயது சிறுமியை தொழில்
பெற்றுதருவதாக கூறி கொழும்பு பகுதிக்கு அழைத்து சென்ற 40வயது நபர் குறித்த சிறுமியை துஸ்பிரயோகத்திற் உட்படுத்தியதில் 13வயது வயது சிறுமி கர்ப்பமாகியுள்ளதாகவும் பெண்ணின் உடல் நிலை குறித்த கொழும்பில் இருந்து தனது வீட்டிற்க்கு வந்த சிறுமியை சிறுமியின் தாய் டிக்கோயா ஆதார வைத்தியசாலைக்கு அழைத்து சென்ற போது வைத்தியசாலையின் வைத்தியர்களால் பரிசோதனைக்கு உட்படுத்திய போதே குறித்த சிறுமி கர்ப்பம் தரித்துள்ள
விடயம் தெரியவந்துள்ளதாகவும் சம்பவம் தொடர்பில் வைத்தியசாலையின் வைத்தி
அதிகாரியின் ஊடாக பொகவந்தலாவ பொலிஸாருக்கு அறிவிக்கபட்ட தாக பொகவந்தலாவ
பொலிஸார் தெரிவித்தனர்

சம்பவம் தொடர்பில் 13வயது சிறுமியை விசாரனைகளுக்கு உட்படுத்திய பொலிஸார்
நடந்த சம்பவத்தினை வாக்குமூலமாக பொலிஸாருக்கு வழங்கியதை அடுத்து குறித்த
சந்தேக நபர் கொழும்பு பகுதியில் தொழில்புரிந்து வருவதாகவும் சந்தேக நபர்
தொடர்பான விடயத்தினை பேலிகொட பொலிஸாருக்கு வழங்கபட்டதை அடுத்து சந்தேக
நபர் பேலியாகொட பொலிஸாரினால் கைது செய்யபட்டதாக பொலிஸாரின் ஆரம்பகட்ட
விசாரனைகiளில் இருந்து தெரியவந்துள்ளது

கர்ப்பம் தரித்த 13வயது சிறுமி டிக்கோயா கிழங்கன் ஆதார வைத்தியசாலையில்
அனுமதிக்கபட்டுள்ளதாக தெரிவித்த பொலிஸார் சிறுமியின் சம்பவம் தொடர்பில்
மேலதி விசாரனைகளை பொகவந்தலாவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை
குறிப்பிடதக்கது.

 

(பொகவந்தலாவ நிருபர் எஸ்.சதீஸ்)

Leave a Reply

error: Content is protected !!
lida bakırköy escort ataköy escort mobilbahis giriş asyabahis Betmatik güncel giriş Süperbahise giriş Nakitbahis Restbet ngsbahis güncel giriş Goldenbahis güncel giriş süpertotobet giriş Mariobet piabet giriş pashagaming porno izle ankara escort beylikdüzü escort izmir escort avcılar escort