முகப்புஎம்மை பற்றிவிளம்பரம்செய்திகள்தொடர்பு
Home > Slider > Update- மக்களுக்கான குடி நீர் ஊற்றெடுக்கும் ஆற்றினை மறித்து சீட்டி தொழிற்சாலைக்கு கொண்டு செல்ல முயற்சிப்பதால் மக்கள் ஆர்பாட்டம்

Update- மக்களுக்கான குடி நீர் ஊற்றெடுக்கும் ஆற்றினை மறித்து சீட்டி தொழிற்சாலைக்கு கொண்டு செல்ல முயற்சிப்பதால் மக்கள் ஆர்பாட்டம்

மக்களுக்கான குடி நீர் ஊற்றெடுக்கும் ஆற்றினை மறித்து சீட்டி தொழிற்சாலைக்கு கொண்டு செல்ல முயற்சிப்பதால் மக்கள் ஆர்பாட்டம்

பொதுமக்களுக்கும் தோட்ட நிர்வாகத்திற்குயிடையில் அமைதியின்மை

களனிவெளி பெருந்தோட்ட நிறுவனத்தின் கீழ் இயங்கும் டிக்கோயா சாஞ்சிமலை
மேல்பிரிவு தோட்டத்தில் 09ம் இலக்க தேயிலை மலையில் ஊற்றெடுக்கும் நீரினை
மறித்து டிக்கோயா பிலிங்பொனி பகுதியில் இயங்கி வரும் ஹேலிஸ் நிறுவனத்தின்
கீழ் இயங்கும் சீட்டி தொழிற்சாலைக்கு நீரினை கொண்டுசெல்லும் வேலைதிட்டம்
ஒன்று முன்னெடுக்கபட்டு வருகின்றமையால் குறித்த திட்டத்தினை உடனடியாக
நிறுத்துமாறு கோரி 13.03.2019 காலையில் இருந்து ஆர்பாட்டம ஒன்று
முன்னெடுக்கபட்டது

இந்த ஆர்பாட்டமானது டிக்கோயா சாஞ்சிமலை பேருந்து தரிப்பிடத்தில் இருந்து
அட்டன் சாஞ்சிமலை பிரதான வீதியின் ஊடாக குறித்த தொழிற்சாலை
அமைக்கபட்டிருக்கும் பகுதி வரை பேரணியாக கோஷங்களை எழுப்பியவாரு மக்கள்
ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்பாட்டத்தில் சுமார் 1000கும் மேற்பட்ட
தொழிலாளர்கள் கலந்து கொண்டனர் இதில் பொகவந்தலாவ லெச்சுமிதோட்டம் டிக்கோயா
பொயிஸ்டன் சாஞ்சிமலை கிழ்பிரிவு மேல்பிரிவு ஆகிய தோட்டங்களை சேர்ந்த
மக்கள் தொழிலுக்கு செல்லாது ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்

09ம் இலக்க தேயிலை மலையில் இருந்து ஊற்றெடுத்து செல்லும் நீரினை மறைத்து
டிக்கோயா சீட்டி தொழிற்சாலைக்கு கொண்டு செல்லுகின்றமையால் டிக்கோயா
சாஞ்சிமலை கிழ்பிரிவு மேல்பிரிவு நோர்வூட் பொயிஸ்டன் பொகவந்தலாவ
லெச்சுமிதோட்டம் ஆகிய தோட்டபகுதிகளை சேர்ந்த 5000கும் மேற்பட்ட மக்கள்
இந்த டிக்கோயா சாஞ்சிமலை மேல்பிரிவு 09ம் இலக்க தேயிலைமலையில்
ஊற்றெடுக்கும் நீரினையே பயன்படுத்தி வருவதாக மக்கள் தெரிவிக்கின்றனர்

இவர்களின் வேலைதிட்டத்தின் ஊடாக இந்த குடி நீர் குறித்த
சீட்டிதொழிற்சாலைக்கு கொண்டு சென்றால் லெச்சுமிதோட்டம் பொயிஸ்டன்
சாஞ்சிமலை பகுதிகளில் உள்ள பாடசாலை மாணவர்களும் பொதுமக்களும்
நீர்யின்மையால் பெரிதும் பாதிக்கபட வேண்டி நேரிடுமென ஆர்பாட்டத்தில்
ஈடுபட்ட மக்கள் தெரிவித்தனர்

இதேவேலை இந்த நீரினை சீட்டி தொழிற்சாலைக்கு கொண்டு செல்வதற்கான
அனைத்துகட்ட வேலைதிட்டங்களும் தற்பொழுது முன்னெடுக்கபட்டு வருவதாக
தெரிவிக்கும் இம்மக்கள் இந்த நீரினை அங்கு கொண்டு சென்றால் விவசாய
பயிர்செய்கையாளர்கள் கால்நடை வளர்ப்பாளர்கள் தேயிலை கொழுந்து
பறிப்பவர்கள் ஆகியோர் பெரிதும் பாதிக்கபட போவதாக இவர்கள் குறிப்பிடுவதோடு
பொகவந்தலாவ கேர்க்கஸ்வோல்ட்  இல.02 தமிழ் வித்தியாலயம் பொயிஸ்டன் தமிழ்
வித்தியாலயம் டில்லரி தமிழ் வித்தியாலயம் ஆகிய பாடசாலைகளில் கல்வி
கற்று வரும் சுமார் 2000கும் மேற்பட்ட பாடசாலை மாணவர்களும்
பாதிக்கபடுவதாக குற்றம் சுமத்தியுள்ளனர்

நடவடிக்கையிலே இந்த ஹேலிஸ் நிறுவனம் மற்றும் களனிவெளி ஆகிய நிறுவனங்கள்
ஈடுபட்டு வருகின்றனர் இதேவேலை குறித்த சீட்டி நிருவனத்திற்க்கு ஒரு
நாளைக்கு மாத்திரம் சுமார் 200இலச்சம் லீற்றர் நீர் தேவைபடுவதாக கல்வி
மான்களும் புத்திஜீவிகளும் தெரிவிக்கின்றனர்

எது எவ்வாறாக இருப்பினும் எங்கள் தோட்டபகுதியில் ஊற்றெடுக்கும் ஊற்று
நீரினை இந்த சீட்டி நிறுவனத்திற்க்கு கொண்டு செல்லும் வேலைதிட்டத்தினை
உடனடியாக நிறுத்தவேண்டுமென ஆர்பாட்டத்தில் ஈடுபட்ட மக்கள் தெரிவித்தனர்

இதேவேலை சம்பவ இடத்திற்க்க வருகை தந்த நோர்வூட் பிரதேசசபை தவிசாளர்
ரவிகுழந்தை வேல் நுவரெலியா மாவட்ட அரசாங்க அதிபர் புஜ்பகுமாரா அவர்களோடு
தொலை பேசி மூலம் தொடர்பு கொண்டு குறித்த திட்டத்தினை இடைநிறுத்துமாறு
கேட்டு கொண்டதற்க்கு இனங்க தற்காலிகமாக குறித்த திட்டத்தினை நிறுத்து
மாறு அரசாங்க அதிபாரினால் உத்தரவு பிறப்பிக்கபட்டுள்ளமை குறிப்பிடதக்கது

இதேவேலை குறித்த தொழிற்சாலையில் இருந்து சாஞ்சிமலை தோட்ட முகாமையாளரை
சந்திக்க வந்த ஆர்பாட்டகாரர்கள் தோட்ட காரியலயத்தினுள் நுழைந்ததனால்
ஆர்பாட்டகாரர்களுக்கும் தோட்ட முகாமையாளருக்கும் சிலமணி நேரம் அமைதியின்மை
ஏற்பட்டுள்ளதோடு சாஞ்சிமலை தோட்டத்தில் இருந்து குறித்த தொழிற்சாலை வரை
தோண்டபட்டிருக்கும் கான்களை ஆர்பாட்டகாரர்கள் மண்யிட்டு முடியுள்ளமையும்
குறிப்பிடதக்கது.

DSC05080 DSC09244 DSC09256 DSC09265 DSC09267

(பொகவந்தலாவ நிருபர் எஸ்.சதீஸ் )

Leave a Reply

error: Content is protected !!