முகப்புஎம்மை பற்றிவிளம்பரம்செய்திகள்தொடர்பு
Home > Slider > நாடு தழுவிய தொழிற்சங்க நடவடிக்கைக்கு நுவரெலியா அதிபர்கள், ஆசிரியர்கள் ஆதரவு!!

நாடு தழுவிய தொழிற்சங்க நடவடிக்கைக்கு நுவரெலியா அதிபர்கள், ஆசிரியர்கள் ஆதரவு!!

நாடளாவிய ரீதியில் 13.3.2019 ஆசிரியர்கள் மற்றும் அதிபர்களால்
மேற்கொள்ளப்பட்ட தொழிற்சங்க நடவடிக்கைக்கு ஆதரவாக நுவரெலியா மாவட்டத்தில்
அதிபர் ஆசிரியர்கள் இப்போராட்டத்திற்கு முழுமையான ஆதரவை
வழங்கியுள்ளதாக இலங்கை கல்விச் சமூக சம்மேளனத்தின் பொதுச்செயலாளர்
சங்கரமணிவண்ணன் தெரிவித்துள்ளார்.
நாடளாவிய ரீதியில் ஆசியர்கள் மற்றும் அதிபர்கள் தொழிற்சங்க நடவடிக்கைக்கு ஆதரவாக சுகயீன விடுமுறை பெற்றுள்ளனர். இந்த நடவடிக்கைகளுக்கு நுவரெலியா மாவட்டத்தில் அதிபர் மற்றும் ஆசிரியர்களின் நிலை எவ்வாறு என்பது தொடர்பில் இலங்கை கல்விச் சமூக சம்மேளனத்தின் பொதுச்செயலாளர் சங்கரமணிவண்ணன் அவர்களை தொடர்பு கொண்டு வினவிய போது நுவரெலியா மாவட்டத்தில் நுவரெலியா மாவட்டத்திலுள்ள அனைத்து அதிபர் மற்றும் ஆசிரியர்கள் ஆதரவை வழங்கியுள்ளனர்.

இவர்கள் இன்று சுகயீன விடுமுறையை அறிவித்து பாடசாலைக்கு செல்லாமல் பணி புறக்கணிப்பு செய்தனர். இது ஒரு வரலாற்று வெற்றியாகும். இதேபோல் இனிவரும் காலங்களிலும் எமது உரிமைகளை பெற்றுக்கொள்வதற்கு நாம் அனைவரும் ஒற்றுமையுடன் ஒன்றுபட்டு போராட
தயாராக வேண்டும்.

அதிபர் ஆசிரியர்களின் சம்பள முரண்பாடு உட்பட முக்கிய கோரிக்கைகளை முன்வைத்து இந்த போராட்டம் மேற்கொள்ளப்பட்டது. கடந்த 22 வருடங்களாக ஆசிரியர் அதிபர்களின் சம்பள முரண்பாடு தீர்க்கப்படாமல் உரிய சம்பள உயர்வும் வழங்கப்படவில்லை. இலங்கை கல்விச் சமூக சம்மேளனம் இந்த நாட்டின் அதிபர் ஆசிரியர்களுக்கு சிறந்த தலைமைத்துவத்தை வழங்கி வருகின்றது. தமது உரிமைகளை பெற்றுக்கொள்வதற்காக முக்கிய கோரிக்கைகளான 22 வருட பி.சி பெரேராவின் சம்பள முரண்பாட்டை நீக்கி சம்பளத்தை அதிகரிக்கவும். புதிய துணைவிதிகள் ஊடாக 30 மாத கால நிலுவைத் சம்பளத்தை வழங்கக்கோரியும் சகல ஆசிரிய உதவியாளர்களையும் ஆசிரியர் தரத்திற்கு உள்வாங்கும் படியும் 2016க்கு பின்பு நியமனம் பெற்ற
ஆசிரியர்களுக்கு இல்லாமல் செய்யப்பட்ட ஓய்வூதிய சம்பள திட்டத்தை மீண்டும்
பெற்றுக்கொள்வதற்காகவும் பாடசாலை பராமரிப்புக்காக பெற்றோரிடம் இருந்து பணத்தை திரட்டுவதை நிறுத்தி மொத்த தேசிய உற்பத்தியில் கல்விக்காக 6 சதவீதத்தை ஒதுக்கி கொள்வதற்காகவும் இந்த போராட்டம் மேற்கொள்ளப்பட்டது என்றார்.

 

தலவாக்கலை பி.கேதீஸ்

Leave a Reply

error: Content is protected !!