முகப்புஎம்மை பற்றிவிளம்பரம்செய்திகள்தொடர்பு
Home > Slider > மலையக மக்கள் மீது அதிக அக்கறை கொண்டவர் திலராஜ். வடிவேல் சுரேஸ் புகழாரம்….

மலையக மக்கள் மீது அதிக அக்கறை கொண்டவர் திலராஜ். வடிவேல் சுரேஸ் புகழாரம்….

 

மலையக மக்கள் மீது திலகராஜ் அதிக கரிசனையும் அக்கரையும் கொண்டுள்ளதாக பெருந்தோட்ட கைத்தொழில் பிரதியமைச்சர் வடிவேல் சுரேஸ் தெரிவித்துள்ளார்.மலைநாட்டு புதிய கிராமங்கள் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு மற்றும் சமுதாய அமைச்சின் நிதியொதுக்கீட்டில் களுத்துறை மாவட்ட ப்ரடெஸ்டர் தோட்டத்தில் 18 வீடுகள் கொண்ட கிராமம் கையளிக்கப்பட்டது.
இந்நிகழ்வில் சமூக வலுவூட்டல் பிரதியமைச்சர் குமார தேவபெரும மற்றும் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் திலகராஜ் கலந்துக்கொண்டனர்.இந்நிகழ்வில் உரையாற்றிய பெருந்தோட்ட கைத்தொழில் பிரதியமைச்சர் வடிவேல் சுரேஸ் கூறும் போது திலகராஜ் உடன் இணைந்து செயற்படுவது பெருமையாக உள்ளதாகவும் மலையக மக்கள் மீது அதிக கரிசணை கொண்டுள்ள நபராகவும் திலகராஜ் காணப்படுவதாகவும் குறிப்பிட்டார்.

மேலும் கூறுகின்ற போது அரசியலை தாண்டி கல்வியிலும் சமூக அக்கரையிலும் திலகராஜ் நற்குணம் உடையவர்.’கட்டுப்பொல’ எனும் பெயரை முள்ளுத்தேங்காய் என அறியவைத்தவர் கூட திலகர் தான்.எனவே தொடர்ந்து வரும் காலங்களில் மக்களுக்கு பல சேவைகளை ஒன்று சேர்ந்து செய்வோம் என பெருந்தோட்ட கைத்தொழில் பிரதியமைச்சர் வடிவேல் சுரேஸ் தெரிவித்தார்.

 

 

தகவல்:-நீலமேகம் பிரசாந்த்-

Leave a Reply

error: Content is protected !!