முகப்புஎம்மை பற்றிவிளம்பரம்செய்திகள்தொடர்பு
Home > Slider > மலையத்தில் ஏற்பட்ட நில அதிர்வு தொடர்பில் தீவிர விசாரணை

மலையத்தில் ஏற்பட்ட நில அதிர்வு தொடர்பில் தீவிர விசாரணை

மலையகத்தின் பதுளை உட்பட பல பகுதிகளில் நேற்றைய தினம் நில அதிர்வு உணரப்பட்டதாக செய்திகள் வெளியாகியது.

இந்நிலையில் இது தொடர்பில் புவியியல் ஆய்வு மற்றும் சுரங்கப் பணியகம் ஆராய்ச்சிகளை ஆரம்பித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

3 – 5 நொடிப்பொழுதுகள் உணரப்பட்ட நில அதிர்வு வெலிமடை, ஹாலிஎல மற்றும் பஸ்ஸரை உட்பல சில பிரதேசங்களில் உணரப்பட்டது.

இந்த நில அதிர்வு 3.02 ரிக்டர் அளவில் பதிவாகியுள்ளதாக பணியக இயக்குனர் நாயகம் சீ.எச்.ஈ.ஆர்.சிறிவர்தன தெரிவித்துள்ளார்.

திடீரென வெடி குண்டு ஒன்று வெடிப்பதனை போன்ற சத்தத்துடன் நில அதிர்வு உணரப்பட்டதாக பிரதேச மக்கள் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் பொருட்களுக்கு சேதமடைந்தமைக்கான எந்த தகவல்களும் வெளியாகவில்லை.

அதற்கமைய தற்போது வரையில் இது தொடர்பான அவதானம் செலுத்தப்பட்டுள்ளதாகவும், ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்படுவதாகவும், புவியியல் ஆய்வு மற்றும் சுரங்கப் பணியக இயக்குனர் நாயகம் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply

error: Content is protected !!