முகப்புஎம்மை பற்றிவிளம்பரம்செய்திகள்தொடர்பு
Home > Slider > பொகவந்தலாவ பகுதியில் சுகாதார பரிசோதர்களினால் மேற்கொள்ளபட்ட சுற்றிவளைப்பினால் பெருந்தொகையான பாவனைக்கு உதவாத பொருட்கள் மீட்பு!!

பொகவந்தலாவ பகுதியில் சுகாதார பரிசோதர்களினால் மேற்கொள்ளபட்ட சுற்றிவளைப்பினால் பெருந்தொகையான பாவனைக்கு உதவாத பொருட்கள் மீட்பு!!

நோர்வுட் பிரதேசசபையின் கீழ் இயங்கும் பொகவந்தலாவ நகரபகுதியில் உள்ள அனைத்து வர்த்தநிலையங்களிலும் சுகாதார பரீசோதகர்களினால் பாரிய சுற்றிவளைப்பு ஒன்று 17.03.2019.ஞாயிற்றுகிழமை காலை மேற்கொள்ளபட்டது .

இதன் போது மேற்கொள்ளபட்ட சுற்றிவலைப்பின் போது உணவகங்கள் வர்த்தக நிலையங்கள் வெதுப்பகங்கள் போன்ற விற்பனை நிலையங்கள் சுகாதார பரிசோதகர்களினால் சோதனையிடபட்டது

இதன் போது பயறு, அரிசி கிரிம்பிஸ், கடலை போன்ற அடிப்படை உணவு பொருட்களும்
சோதனைக்கு உட்படுத்தபட்டபோது பாவனைக்கு உதவவாக ஒரு சில பொருட்களும்
மீட்கபட்டுள்ளதாக பொது சுகாதார பரீசோதகர்கள் தெரிவித்தனர்.

இதேவேலை பொகவந்தலாவ நகரில் உள்ள ஒரு வர்த்தக நிலையத்தினை மேற்கொண்ட
சுற்றிவளைப்பின் போது சுகாதார பரீசோதகர்கள் 35கிலோவுக்கும் மேற்பட்ட
பாவனைக்கு உதவாத கிரீம்பிஸ்கட் மீட்கபட்டபோது அதில் புலுக்கள் காணபட்டதாகவும்
தெரிவித்த சுகாதார பரீசோதகர்கள் பாவனைக்கு உதவாக பொருட்கள் வைத்திருந்த
வர்த்தக நிலைய வர்த்தகர்களுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யபட்டமையும்
குறிப்பிடதக்கது.

இதேவேலை பாவனைக்கு உதவாத பொருட்களை மண்ணென்ணை ஊற்றி
அழிக்கபட்டதாகவும் பொது சுகாதார பரீசோதகர்கள் தெரிவித்தனர்

பொகவந்தலால நகரில் மேற்கொள்ளபட்ட சுற்றிவளைப்பிற்கு நுவரெலியா தலவாகலை
மஸ்கெலியா நோர்வுட் கொத்மலை பொகவந்தலாவ,போன்ற பகுதிகளில் இருந்து சுகாதார
பரீசோதகர்கள் வரவழைக்கபட்டு இந்த சுற்றிவளைப்பினை மேற்கொண்டமை
குறிப்பிடதக்கது.

DSC09311 DSC09334 DSC09335 DSC09338 DSC09339

 

(பொகவந்தலாவ நிருபர் எஸ்.சதீஸ்)

Leave a Reply

error: Content is protected !!