முகப்புஎம்மை பற்றிவிளம்பரம்செய்திகள்தொடர்பு
Home > Slider > மே 9,10 இரண்டு நாள் சுகயீன விடுமுறை போராட்டத்தை வெற்றி பெறச் செய்ய அழைப்பு விடுக்கும் ஆசிரியர் சேவை சங்கம்!!

மே 9,10 இரண்டு நாள் சுகயீன விடுமுறை போராட்டத்தை வெற்றி பெறச் செய்ய அழைப்பு விடுக்கும் ஆசிரியர் சேவை சங்கம்!!

அதிபர் ஆசிரியர்களின் சம்பள முரண்பாடு உட்பட முக்கிய கோரிக்கைகளை முன்வைத்து கடந்த பெப்ரவரி மாதம் 28 ஆம் திகதி கொழும்பு கல்வி அமைச்சுக்கு முன்பாக ஆயிரக்கணக்கான ஆசிரியர்கள் அதிபர்கள் ஒன்றிணைந்து பாரிய போராட்டம் ஒன்றை நடத்தினர்.

ஆசிரியர்களின் இக்கோரிக்கைகளை தீர்ப்பதற்குப் பதிலாக அரசாங்கம் காவல்துறையினரை கொண்டு ஆசிரியர்கள் மீது தண்ணீர் தாரை மற்றும் கண்ணீர்ப்புகை பிரயோகம் குண்டாந்தடி தாக்குதல் மூலம் ஆசிரியர்கள் ரத்தம் சிந்தி கொழும்பு பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.

அதுமட்டுமின்றி இன்றைய கல்வி அமைச்சரின் சோற்றுப் பார்சல் கூட்டத்தினரால் குப்பைகளை கொண்டு தாக்குதல்களை மேற்கொள்ளும் அளவிற்கு மிகவும் கீழ்த்தரமான மற்றும் பைத்தியக்கார தனத்திற்கும் அவர்கள் தள்ளப்பட்டுள்ளனர்.

எனவே இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் முகமாகவும் கோரிக்கையை வென்றெடுப்பதற்காகவும் கடந்த மார்ச் மாதம் 13ஆம் திகதி நாடு தழுவிய ரீதியில் சுகயீன விடுமுறை போராட்டம் வெற்றி பெற்றது எனவே அரசாங்கம் சாதகமான எந்த பதிலையும் தரவில்லை இதற்கு மாறாக ஆசிரியர் சங்கங்கள் மீது குறைகளை கூறி வருகின்றன எனவே தமது உரிமைகளை வென்றெடுப்பதற்காக அனைத்து அதிபர் ஆசிரியர் சங்கங்களும் ஒன்றிணைந்து மே 9,10 திகதி சுகயீன விடுமுறை போராட்டத்தை முன்னெடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

எனவே இப்போராட்டத்திற்கு அனைத்து ஆசிரியர் அதிபர்களை போராட்டத்தில் ஒன்றிணைய அழைப்பு விடுப்ப தோடு முக்கிய கோரிக்கைகளான கடந்த 22 வருடங்களாக ஆசிரியர் அதிபர்களின் சம்பள முரண்பாடு தீர்க்கப்படாமல் உரிய சம்பள உயர்வும் வழங்கப்படவில்லை 1994 ஆம் ஆண்டு ஓரளவு சமந்தா சம்பளத்தை பெற்ற ஆசிரியர்கள் 1994 ஆம் ஆண்டு B.C பெரேராவின் சம்பள ஆணைக்குழுவின் பிரகாரம் பாரிய முரண்பாடு தோற்றுவிக்கப்பட்டது இதன் மூலம் நம் நாட்டில் அரசு ஊழியர்களில் மிக குறைந்த சம்பளத்தை பெறுபவர்கள் ஆசிரியர் அதிபர்களாவர், கடந்த 22 வருடங்களாக பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தியும் ஆட்சிக்கு வந்த அரசாங்கங்கள் முரண்பாட்டை தீர்க்க நடவடிக்கை எடுக்கவில்லை.

தற்போது ஆசிரியர்கள் ஒரு நாளைக்கு பெறும் சம்பள விபரம் முதலாம் வகுப்பு ரூபா 1498/=,தரம் 2.1 ரூபா 1305/=தரம் 2.2 ரூபா 1110/=தரம் 3.1( பட்டதாரி) ரூபா 1073/=தரம் 3.1 (விஞ்ஞான பீடம்) ரூபா 1010/=தரம் 3. 1 (இரண்டு வருட டிப்ளோமா) ரூபா 924/=தரம் 3.11 ரூபா 924/=அதிபர்களின் ஒரு நாள் சம்பளம்முதலாம் வகுப்பு ரூபா 1544/=, இரண்டாம் வகுப்பு ரூபா 1334/=மூன்றாம் வகுப்பு ரூபா 1176/=அதுமட்டுமல்லாது 2014 10 22 ஆசிரியர் சேவை யாப்பு மற்றும் அதிபர் சேவை யாப்பு ஆகியவற்றின் ஊடாக 30 மாத நிலுவை சம்பளத்தை இல்லாமல் செய்திருக்கின்றார்கள் இதன் மூலம் அதிபர் ஆசிரியர்களுக்கு கிடைக்கவேண்டிய சம்பள தொகையான ரூபா 22500/=, முதல் ரூபா90000/= வரையான தொகை அரசாங்கத்தினால் கொள்ளையடிக்கப்பட்டு இருக்கின்றது இது அதிபர் ஆசிரியருக்கு செய்யும் பாரிய துரோகமாகும். எனவேதான் இலங்கை ஆசிரியர் சேவை சங்கம் இந்த நாட்டின் அதிபர் ஆசிரியர்களுக்கு சிறந்த தலைமைத்துவத்தை வழங்கி வருகின்றது. தமது உரிமைகளை பெற்றுக்கொள்வதற்காக போராடிய ஆசிரியர்கள் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலை கண்டித்தும் முக்கிய கோரிக்கைகளான•

22 வருட பிசி பெரேராவின் சம்பள முரண்பாட்டை நீக்கி சம்பளத்தை அதிகரிக்கவும்• புதிய துணைவிதிகள் ஊடாக கொள்ளையடித்த 30 மாத கால நிறுவத் சம்பளத்தை வழங்கக்கோரியும்• சகல ஆசிரிய உதவியாளர்களையும் ஆசிரியர் தரத்திற்கு உள்வாங்கும் படியும்• 2016க்கு பின்பு நியமனம் பெற்ற ஆசிரியர்களுக்கு இல்லாமல் செய்யப்பட்ட ஓய்வூதிய சம்பள திட்டத்தை மீண்டும் பெற்றுக்கொள்வதற்காகவும்•

பாடசாலைக்குள் கற்றல் கற்பித்தல் செயல்பாட்டுக்கு இடையூறு விளைவிக்கும். பாடசாலை நிர்வாகத்திற்கு இடையூறாக இருக்கும். ஆவணங்களை பூர்த்தி செய்தல் உள்ளிட்ட மேலதிக வேலையை விட்டு நீக்கி கொள்வதற்காகவும்• பாடசாலை பராமரிப்புக்காக., பெற்றோரிடம் இருந்து பணத்தை திரட்டுவதை நிறுத்தி மொத்த தேசிய உற்பத்தியில் கல்விக்காக 6 சதவீதத்தை ஒதுக்கி கொள்வதற்காகவும்மே மாதம் 9,10 திகதி நாட்டின் சகல பாடசாலைகளினதும் அதிபர் ஆசிரியர்கள் சுகயீன விடுமுறை அறிவித்து விட்டு தங்களது மாவட்டத்தில் முன்னெடுக்கப்படும் போராட்டங்களில் கலந்துகொள்ளும்படியும், போராட்டத்தை சீர்குலைக்க அரசியல் மட்டங்களிலும் இனவாத தொழிற்சங்கங்களும் முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன எனவே ஆசிரியர்கள் எச்சரிக்கையாகவும் தெளிவோடும் போராட்டத்தை வெற்றி பெற செய்ய ஒன்றிணைய வேண்டுமென இலங்கை ஆசிரியர் சேவை சங்கத்தின் உப தலைவர் சுந்தரலிங்கம் பிரதீப் அழைப்பு விடுத்துள்ளார்.

Leave a Reply

error: Content is protected !!