பொய்க்கு மகுடம்சூடும் மலையக அரசியல்! வெற்றிநடை போடும் ‘கோபல்ஸ்’ யுக்தி!!

பொய்க்கு மகுடம்சூடும் மலையக அரசியல்! வெற்றிநடை போடும் ‘கோபல்ஸ்’ யுக்தி!!

ஒரு தனி மனிதனால் உலகையே அச்சுறுத்த முடியும், உலக சரித்திரத்தையே புரட்டிப்போட முடியும் என்பதை நிரூபித்துக் காட்டியவர்தான் சர்வாதிகாரி என இகழப்படும் ஹிட்லர்.சாதாரண குடும்பத்தில் பிறந்து, அனைத்துவிதமான துன்பங்களையும் அனுபவித்து, சாப்பாட்டுக்காக இராணுவத்தில் இணைந்து, தடைக்கற்களையெல்லாம், படிக்கற்களாகமாற்றி உச்சம் தொட்டு, முழு உலகையும் கைப்பற்ற கங்கணம்கட்டி செயற்பட்டவர்தான் அவர்.

அதிகாரவெறி தலைக்கேற, நான் என்ற மமதை மனதில் குடிகொள்ள வரலாற்றின் பக்கங்களை இருள் சூழவைத்த ஹிட்லரின் கொள்கைப்பரப்பாளராக செயற்பட்டவரே கோபல்ஸ் (Goebbels) எனப்படுபவர். ஹிட்லரின் வலது கை, அந்தரங்க செயலாளர் என்றுகூட விளிக்கலாம்.

எந்தப் பொய்யையும் நயமாகச்சொல்லி, மக்களின் மனங்களை மாற்றி நம்பவைக்கும் வித்தை அறிந்தவன். அதாவது, ஒரு கருத்தியலை, மெல்லமெல்ல மக்களிடம் திணித்து – அதை, பொதுக் கருத்தாக்கி – அந்தக் கருத்தைச் சுற்றியே மக்களை உரையாடவைக்கும் பெரும் தந்திரக்காரன்.

இன்றைய மலையக அரசியலும் இப்படிதான். அற்பசொற்ப சலுகைகளுக்கு அடிபணிந்து அரசியல் பிழைப்பை வெற்றிகரமாக முன்னெடுப்பதற்கு குறித்த ‘கோபல்ஸ்’ கோட்பாட்டையே சிலர் பின்பற்றிவருகின்றனர்.

இலங்கைத்தொழிலாளர் காங்கிரஸாக இருந்தால் என்ன, தமிழ் முற்போக்கு கூட்டணியாக இருந்தால் என்ன, அவை இரண்டுமே ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள்தான் என்பதை சம்பளப் பிரச்சினையின்போது ஏறத்தாழ உறுதிப்படுத்திவிட்டன.

‘கோபல்ஸ்’ வியூகத்தை கொள்கையாகவே ஏற்று செயற்பட்டுவருகின்றனவா என்ற சந்தேகமும் மேலோங்கியுள்ளது.

‘1000’ நாடகம்

மலையகத்தில் வாக்குவேட்டை நடத்துவதற்காக ‘சாத்தியமில்லை’ என தெரிந்தும் தேர்தல் குண்டாக 1000 ரூபா என்ற கோரிக்கையை இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் முன்வைத்தது. அது குறித்து சமூகத்தில் கருத்தாடல் உருவாக்கப்பட்டது. தேசிய ரீதியிலும் கலந்துரையாடல்கள் இடம்பெற்றன.

எனவே, நாட் சம்பளமாக ஆயிரம் ரூபா கிடைக்கும் என மக்கள் உறுதியாக நம்பினார்கள். நான்கு ஆண்டுகள் கடந்துள்ள நிலையிலும் அந்த இலக்கு இன்னும் எட்டப்படவில்லை. இறுதியில் வெறும் 20 ரூபாவே சம்பள உயர்வாக வழங்கப்பட்டது.

இந்நிலையில், குறித்த தோல்வியை மூடிமறைத்து- மக்களை ஏமாற்றுவதற்காக அடிப்படை சம்பளத்தில் 40 சதவீதம் சம்பள உயர்வு கிடைத்துவிட்டது என ‘கோபல்ஸ்’ பாணியில் தோட்டப்பகுதிகளில் பிரசாரம் முன்னெடுக்கப்பட்டது. மக்கள் பாராட்டுவிழா நடத்துமளவுக்கு மனநிலை மாற்றியமைக்கப்பட்டது.

மறுபுறத்தில் தமிழ் முற்போக்கு கூட்டணியும் அரசியல் நாடகத்தை அரங்கேற்ற ஆரம்பித்தது.

கூட்டு ஒப்பந்தத்தில் பெருந்தோட்டத்தொழிலாளர்களுக்கு பெரும் அநீதி இழைக்கப்பட்டுள்ளது. எனவே, ஊக்குவிப்பு கொடுப்பனவாக 140 ரூபாவை வழங்குவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும். அவ்வாறு இல்லாவிட்டால் அரசாங்கத்தில் இருந்து வெளியேறுவோம் என கூட்டணி தலைவர்கள் சூளுரைத்தனர்.

ஆயிரம் ரூபா என்ற கோரிக்கையை மக்கள் மறக்கும் வகையில், அவர்கள் மத்தியில் ரூ. 140 என்ற கருத்து விதைக்கப்பட்டது. அரசாங்கத்துடன் பேச்சு, இழுபறி, கால அவகாசம் என நாடகத்தின் பாகங்கள் தொடர்ந்தன.

எனினும், 140 ரூபா கிடைக்கவில்லை. தமிழ் முற்போக்கு கூட்டணியும் அரசிலிருந்து விலகவில்லை.

மாறாக குரங்கு கொப்பு தாவுவதுபோல் 140 ரூபாவை கைவிட்டுவிட்டு ‘பட்ஜட்’ ஊடாக 50 ரூபா கொடுப்பனவு வழங்கப்படும் என பிரமாண்டமாக அறிவிப்பு விடுத்தது. பெருந்தோட்டத்தொழிலாளர்களுக்கு ‘பட்ஜட்’ ஊடாக வரலாற்றில் முதன்முறையாக கொடுப்பனவு வழங்கப்படவுள்ளது என மார்தட்டினர். இறுதியில் பட்ஜட்டில் எவ்வித அறிவிப்பும் வெளியாகவில்லை.

எனினும், கொடுப்பனவாக 50 ரூபாயை வழங்குவதற்கு நிதி அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது. ஒரு வருடம் எனக் கூறப்பட்டாலும், அதற்கான கால எல்லை பற்றி அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை. டிசம்பர்மாதம் வரை மட்டுமென்றால் 8 மாதங்கள்தான் அந்த கொடுப்பனவும் கிடைக்கும்.

எனவே, தோட்டத்தொழிலாளர்களை திட்டமிட்ட அடிப்படையில் ஏமாற்றவும், தமது பலவீனங்களை மூடிமறைப்பதற்காகவும் மலையகத்தை மையப்படுத்தி இயங்கும் தொழிற்சங்கங்களாக இருந்தால் என்ன, அரசியல் கட்சிகளாக இருந்தால் என்ன, அவை அனைத்துமே ‘கோபல்ஸ்’ கோட்பாட்டையே கடைபிடிக்கின்றன.

மக்களுக்கு சட்டரீதியாக கிடைக்கவேண்டிய அடிப்படை உரிமைகள்கூட மலையக மக்களுக்கு தற்போதுதான் கிடைக்கின்றன. வீடுகளை அமைப்பதற்கு இந்தியாவும் நிதியுதவி வழங்கியுள்ளது. ஆனால், தனிவீடு கிடைத்துவிட்டால், ஏனைய அனைத்தும் கிடைத்துவிடும் என அர்த்தபடா. !

 

மலையக கள்ளன்

 239 total views,  2 views today

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )
error: Content is protected !!
bayan escort escort bayan brazzers tecavüz porno altyazili porno porno hikayeleri turbanlı porno escort bayan bayan escort escort bayan mersin escort escort mersin mersin escort bayan