வரவு செலவு திட்டத்திற்கு எதிராக இம்மாதம் ஐந்தாம் திகதி இறுதி வாக்கெடுப்பிலும் ஜே.வி.பி எதிர்த்து வாக்களிக்கும் – ஜே.வி.பி!!

வரவு செலவு திட்டத்திற்கு எதிராக இம்மாதம் ஐந்தாம் திகதி இறுதி வாக்கெடுப்பிலும் ஜே.வி.பி எதிர்த்து வாக்களிக்கும் – ஜே.வி.பி!!

ஐக்கிய தேசிய கட்சியினால் பாராளுமன்றத்தில் சமர்பிக்கப்பட்டுள்ள 2019 ஆம் ஆண்டுகான வரவு செலவு திட்டத்திற்கு எதிராக இம்மாதம் ஐந்தாம் திகதி இறுதி வாக்கெடுப்பிலும் ஜே.வி.பி எதிர்த்து வாக்களிக்கும் என ஜே.வி.பியின் தேசிய அமைப்பாளர் பிமல் ரத்னாயக்கா தெரிவித்தார்.

அதேநேரத்தில் இம்முறை சமர்ப்பிக்கப்பட்ட வரவு செலவு திட்டத்தில் ஒரு வாக்கெடுப்பில் கையாலாகாத அரசு தோல்வி கண்டுள்ள நிலையில் முழு வரவு செலவு திட்டத்தினையும் தோல்வியடைய செய்ய ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேனவின் குழுவினரின் கைகளில் இருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

ஜே.வி.பியின் கொத்மலை பிரதேச சபைக் கூட்டம் பூண்டுலோயா நகரில் இடம்பெற்றது. இதில் கலந்துகொண்ட பின் ஊடகங்களுக்கு கருத்துக்கள் தெரிவிக்கையில் அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அங்கு ஊடகவியளர்க எழுப்பிய கேள்விக்கு மேலும் கருத்துரைத்த அவர்,

நாட்டின் பிரதமர் ரணில் விக்ரமசிங்க மற்றும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஆகியோரின் கூட்டு நடவடிக்கையை மக்களும் நாமும் ஏற்றுக்கொண்டதாக இல்லை.

இந்த நிலையில் 2019 ஆண்டுக்கான வரவு செலவு திட்டத்தை ஐ.தே.க அரசு முன்வைத்து மூன்று வாக்கெடுப்பில் ஒன்று தோல்வி கண்டுள்ளது.

கட்சி என்ற உணர்வுடன் செயற்படாது மாங்காய் கொட்டைகளை சேகரிக்க சென்ற ஐ.தே.க உறுப்பினர்கள் பாராளுமன்றத்திற்கு சமூகம் தராததால் வாக்கெடுப்பில் தோல்வி கண்டனர்.

அதேநேரத்தில் ஊழல்களை கொண்டு செயற்படும் ஐ.தே.க அரசாங்கம் வரவு செலவு திட்டத்தின் முதல் வாக்கெடுப்பின் போது ஜனாதிபதி தரப்பில் 20 உறுப்பினர்கள் பாராளுமன்றத்திற்கு வருகை தராததால் வெற்றி பெற்றனர். இது ஒரு நாடகமாகவும் இருந்திருக்கலாம்.

ஆனால் மக்கள் விடுதலை முன்னணியான ஜே.வி.பி தொடர்ந்தும் தனது நிலைப்பாட்டில் வரவு செலவு திட்டத்தை தோல்வியடைய செய்ய எதிர்த்தே வாக்களிக்கும் இதில் மாற்றமில்லை.

இருந்த போதிலும் உள்ளூராட்சி சபைகளுக்கான நிதி ஒதுக்கீடு தொடர்பான முக்கிய வாக்கெடுப்பு தோல்வி கண்டுள்ளது. இதனால் உள்ளூராட்சி சபைகள் அதன் உத்தியோகஸ்தர்கள் மற்றும் சபைகளின் நடவடிக்கைகளுக்கு சில பாதிப்புகள் ஏற்படும் வாய்புள்ளது.

இந்த தருணத்தில் எதிர்வரும் ஐந்தாம் திகதி இடம்பெறவுள்ள இறுகட்ட வாக்கெடுப்பு பலரின் எதிர்பார்பாக அமைந்துள்ளது. அந்தவகையில் பிரதமர் ரணிலின் ஆட்சிக்கு முடிவுகட்டும் வகையில் இந்த வரவுசெலவு திட்டத்தை வெற்றியடைய வைப்பதும் அல்லது தோல்வியடைய வைப்பதும் ஐனாதிபதி மைத்திரி தலைமையிலான குழுவினரிடத்தில் தங்கியுள்ளதை அவர் சுட்டிக்காட்டினார்.

அதேநேரத்தில் வரவு செலவு திட்டத்தில் அரசாங்கம் வெற்றிபெற்றால் தோல்வி கண்டுள்ள இரண்டு விடயங்களுக்கு மீண்டும் அமைச்சவையில் கூடி அங்கு எடுக்கப்படும் தீர்மாணத்தை மீண்டும் பாராளுமன்றத்திற்கு கொண்டு சென்று அனுமதி பெற்று அதற்கான தீர்வொன்றை நிறைவேற்றும் பட்சத்தில் உள்ளூராட்சி சபை களுக்கு வரும் ஆபத்தை தவிர்க்க முடியும் என்பதும் கருத்தாக உள்ளது.

ஆனால் இம்முறை வரவு செலவு திட்டம் தோல்வியை நோக்கியே செல்லும் என்பதும் கருத்தாக உள்ளது என்றார். இவ்வாறு பலசிக்கல்களுக்கு முகம் கொடுக்கும் வகையில் அரசு தரப்பினர் சிக்கி தவிக்கும் நிலைக்கும் ஆளாகியுள்ளதாகவும் அவர் கூறினார்.

வில்பத்து விவகாரம் தொடர்பில் எழுப்பப்பட்ட கேள்வி ஒன்றுக்கு பதிலளித்த அவர் தெரிவித்ததாவது.

வில்பத்து வனப்பகுதி இடம் தொடர்பில் அங்கு பாதிப்புகள் இல்லை. அதை நேரத்தில் மன்னார் பிரதேச மக்களின குடியேற்றத்தில் தான் பிரச்சினை உள்ளது .

1990 ஆம் ஆண்டு காலப்பகுதியில் அங்கிருந்து விலக்கப்பட்ட மக்களில் ஒரு சிலர் தமக்கு இடங்களை பிடித்து அப்பகுதிக்கு முற்கம்பி வேலிகளை அமைத்து வாழ்கின்றனர்.

அன்று இப்பிரதேசத்திற்கு பொறுப்பான அமைச்சர் ரிசாட் பதுர்தீன் அவர் சார்ந்த மக்களை குடியமர்த்த அவருக்கு வழங்கிய இடத்தை விட கூடுதலான இடத்தை அதுவும் வில்பத்துவில் இல்லை மகாவில்லு பிரதேசத்திலும் இல்லை மாறாக வன பிரதேசமற்ற பிரதேசத்தில் 2013, 14, 15 ஆகிய ஆண்டுகளில் இடங்களை ஆக்கிரமித்துள்ளார். இது சட்டவிரோதமான குற்றமாகும் அதற்காக அவரை சட்டத்திற்கு முன் ஆஜர் படுத்த வேண்டும்.

அதேநேரத்தில் தனி ஒரு இனம் இன்றி சிங்களம், தமிழ், முஸ்லிம் மக்களை இப்பிரதேசத்தில் மீள் குடியமர்தப்பட வேண்டும் என்பதே வெற்றியை தரும் என எதிர்பார்ப்பதாக அவர் தெரிவித்தார்.

 

க.கிஷாந்தன்

 117 total views,  4 views today

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )
mersin escort mersin escort mersin escort mersin escort mersin escort mersin escort kayseri escort konya escort malatya escort malatya escort erotik film film izle komedi film izle
error: Content is protected !!