முகப்புஎம்மை பற்றிவிளம்பரம்செய்திகள்தொடர்பு
Home > Slider > செனன் பகுதியில் அதிகவேகத்தில் சென்ற முச்சக்கர வண்டி விபத்து- பலத்த காயங்களுக்கு உள்ளாகிய சாரதி

செனன் பகுதியில் அதிகவேகத்தில் சென்ற முச்சக்கர வண்டி விபத்து- பலத்த காயங்களுக்கு உள்ளாகிய சாரதி

அதிகவேகத்தில் சென்ற முச்சக்கர வண்டி பிரதான வீதியை விட்டு விலகி விபத்து -சாரதி பலத்த காயங்களுக்கு உள்ளாகி நாவலபிட்டி வைத்தியசாலையில் அனுமதி

தலவாகலையில் இருந்து புத்தளம் பகுதியை நோக்கி பயனித்த முச்சக்கர வண்டி
ஒன்று ஹட்டன் கொழும்பு பிரதான வீதியின் செனன் பகுதியில் பிரதான வீதியில்
இருந்து பத்து அடி பள்ளத்தில் குடைசாய்ந்து உள் வீதி ஒன்றினுள்
குடைசாய்ந்துள்ளதாக ஹட்டன் பொலிஸார் தெரிவித்தனர் இந்த சம்பவம்
12.04.2019.வெள்ளிகிழமை காலை 09.30மணி அளவில் இடம்பெற்றதாக ஹட்டன்
பொலிஸார் மேலும் தெரிவித்தனர்

தலவாகலை பகுதியில் இருந்து புத்தளம் பகுதிக்கு சென்ற முச்சக்கர வண்டியே
இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளதாகவும் பலத்த காயங்களுக்கு உள்ளான சாரதி
வட்டவலை வைத்தியசாலையில் இருந்து மேலதிக சிகிச்சைக்காக நாவலபிட்டி
வைத்தியசாலைக்கு மாற்றபட்டுள்ளதாகவும் காயங்களுக்கு உள்ளான சாரதி தமிழ்
சிங்கள புத்தாண்டினை முன்னிட்டு இனிப்பு பண்டங்களை தயாரித்து புத்தளம்
பகுதிக்கு சென்று கொண்டிருந்த வேலையிலே விபத்து ஏற்பட்டுள்ளதாக
பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரனைகளில் இருந்து தெரியவந்துள்ளது

எனவே முச்சக்கர வண்டியின் அதிக வேகத்தின் காரணமாகவே இந்த விபத்து
ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்

வீபத்துக்குள்ளான முச்சக்கர வண்டி பகுதி அளவில் சேதம் ஏற்பட்டுள்ளதோடு
சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரனைகளை ஹட்டன் பொலிஸார் மேற்கொண்டு
வருகின்றமை குறிப்பிடதக்கது.

 

(பொகவந்தலாவ நிருபர் எஸ்.சதீஸ்)

Leave a Reply

error: Content is protected !!