முகப்புஎம்மை பற்றிவிளம்பரம்செய்திகள்தொடர்பு
Home > Slider > நோர்வூட்டில் ஏற்பட்ட கடும் காற்றுடன் கூடிய மழை பெய்ததால் அங்குள்ள 10ற்கும் மேற்பட்ட தொழிலாளர் குடியிருப்புக்கள் சேதம்!!

நோர்வூட்டில் ஏற்பட்ட கடும் காற்றுடன் கூடிய மழை பெய்ததால் அங்குள்ள 10ற்கும் மேற்பட்ட தொழிலாளர் குடியிருப்புக்கள் சேதம்!!

நோர்வூட் பொலிஸ் பிரிவில் அமைந்துள்ள வெஞ்சர் தோட்டத்தில் 11.04.2019 அன்று மாலை ஏற்பட்ட கடும் காற்றுடன் கூடிய மழை பெய்ததால் அங்குள்ள 10ற்கும் மேற்பட்ட தொழிலாளர் குடியிருப்புக்கள் சேதமடைந்துள்ளன.

வெஞ்சர் தோட்டத்தில் சில இடங்களில் வீசிய கடும் காற்றுக்காரணமாக வீடுகளின் கூரைகள் மழையுடன் கூடிய காற்றில் அள்ளுண்டு போயுள்ளதாகவும், தொடர்ந்து பெய்த மழையின் காரணமாக வீடுகளில் காண்ப்பட்ட அத்தியவசிய பொருட்கள் மற்றும் ஆவணங்கள் பாடசாலை புத்தகங்கள் என அனைத்தும் நீரில் சேதமடைந்துள்ளன.

அத்துடன் கடும் காற்றினால் மரங்களின் கிளைகள் வீட்டின் கூரைகள் மீது முறிந்து வீழ்ந்துள்ளதாகவும் அப் பகுதி மக்கள் தெரிவித்தனர்.

Photo (6) Photo (4) Photo (3)

பாதிக்கப்பட்டவர்கள் கூரைகளை மீண்டும் சீர்செய்து குறித்த வீடுகளிலேயே தற்போது தங்கி வருகின்றனர்.

மேலும், மாலை வேளைகளில் இடி, காற்றுடன் கூடிய மழை பெய்வதால் அனைவரும் பாதுகாப்புடன், அல்லது பாதுகாப்பான இடங்களை நோக்கி செல்வது குறிப்பிடத்தக்கது.

 

(க.கிஷாந்தன்)

Leave a Reply

error: Content is protected !!