முகப்புஎம்மை பற்றிவிளம்பரம்செய்திகள்தொடர்பு
Home > Slider > தமிழ் சிங்கள புதுவருடத்தினை முன்னிட்டு அனுமதி பத்திரம்மின்றி விற்பனைக்கு வைக்கபட்டிருந்த மதுபான போத்தல்களுடன் ஒருவர் கைது!!

தமிழ் சிங்கள புதுவருடத்தினை முன்னிட்டு அனுமதி பத்திரம்மின்றி விற்பனைக்கு வைக்கபட்டிருந்த மதுபான போத்தல்களுடன் ஒருவர் கைது!!

அனுமதி பத்திரமின்றி தமிழ் சிங்கள புதுவருடத்தினை முன்னிட்டு விற்பனைக்காக வைக்கபட்டிருந்த 50 மதுபான போத்தல்கள் அட்டன் குற்றதடுப்பு பொலிஸாரினால் 12.04.2019.வெள்ளிகிழமை விடியற்காலை மீட்கபட்டுள்ளதோடு சந்தேக நபர் ஒருவரும் கைது செய்யபட்டுள்ளதாக அட்டன் குற்றதடுப்பு பொலிஸார் தெரிவித்தனர்

நோர்வூட் பொலிஸ்பிரிவிற்குட்பட்ட நோர்வூட் சென்ஜோன்டிலரி தோட்டபகுதியில்
உள்ள லயன் குடியிருப்பில் அறை ஒன்றில் அனுமதி பத்திரமின்றி விற்பனைக்காக
வைக்கபட்டிருந்த மதுபான போத்தல்கள் இவ்வாறு மீட்கபட்டுள்ளதாக அட்டன்
குற்றதடுப்பு பொலிஸார் மேலும் தெரிவித்தனர்

அட்டன் பொலிஸ் வலையத்திற்கு பொறுப்பான பொலிஸ் அத்தியட்சகர் ரவிந்திர
அம்பேபிட்டிய அவர்களின் பணிப்புரைக்கு அமைய அட்டன் குற்றதடுப்பு
பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் மேற்கொண்ட
சுற்றிவளைப்பின் போதே இந்த 50 மதுபான போத்தல்களும் மீட்கபட்டுள்ளதோடு
சந்தேக நபர் ஒருவரையும் கைது செய்துள்ளதாக அட்டன் குற்றதடுப்பு
பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரனைகளில் இருந்து தெரியவந்துள்ளது

குறித்த சந்தேக நபருக்கு 12.04.2019.வெள்ளிகிழமை அட்டன் குற்றதடுப்பு
பொலிஸாரினால் பிணை வழங்கபட்டுள்ளதோடு எதிர்வரும் 16ம் திகதி
செவ்வாய்கிழமை அட்டன் நீதவான் நீதிமன்றில் முன்னிலையாகுமாறு அட்டன் குற்ற
தடுப்பு பொலிஸாரினால் கட்டளை பிறப்பிக்கபட்டுள்ளது

சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரனைகளை அட்டன் குற்றதடுப்பு பொலிஸார்
விசாரனைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடதக்கது.

 

பொகவந்தலாவ நிருபர் எஸ்.சதீஸ்)

Leave a Reply

error: Content is protected !!