முகப்புஎம்மை பற்றிவிளம்பரம்செய்திகள்தொடர்பு
Home > Slider > பேருந்தில் மோதுண்ட சிறுவன் பலத்த காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதி- பொகவந்தலாவையில் சம்பவம்

பேருந்தில் மோதுண்ட சிறுவன் பலத்த காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதி- பொகவந்தலாவையில் சம்பவம்

பொகவந்தலாவ கெம்பியன் இராணிகாடு பகுதியில் இருந்து பொகவந்தலாவ நகர்பகுதிக்கு சென்ற தனியார் பேருந்தில் 03வயது சிறுவன் ஒருவன் மோதுண்டு பலத்த காயங்களுடன் பொகவந்தலாவ வைத்தியசாலையில் அனுமதிக்கபட்டுள்ளதாக பொகவந்தலாவ பொலிஸார் தெரிவித்தனர்

இந்த சம்பவம் 12.04.2019.வெள்ளிகிழமை மாலை 04மணி அளவில் இடம் பெற்றதாக
பொலிஸார் மேலும் தெரிவித்தனர். குறித்த சிறுவன் தனது தந்தையோடு
பொகவந்தலாவ கெம்பியன் நகரிற்கு வந்த சிறுவன் சிறு நீர் கழித்து விட்டு
வரும் பொழுதே பேருந்தில் கெம்பியன் நகரில் உள்ள மதுபானசாலைக்கு முன்பாக
குறித்த தோதுண்டதாகவும் சிறுவனின் தலைபகுதி பலமாக அடிபட்டு காயங்கள்
ஏற்பட்டுள்ளதாகவும் சிறுமி பொகவந்தலாவ வைத்தியசாலையில் இருந்து மேலதிக
சிகிச்சைக்காக டிக்கோயா கிழங்கன் ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு
செல்லபட்டுள்ளதாக பொகவந்தலாவ வைத்தியசாலையின் பேச்சாளர் ஒருவர்
தெரிவித்தார்

இதேவேலை குறித்த பேருந்தின் சாரதி தப்பி சென்று பொலிஸ் நிலையத்தில்
ஆஜராகியுள்ளதாகவும் சம்பவம் இடம் பெற்ற இடத்திற்கு சென்று பேருந்தை
பொலிஸ் நிலையத்திற்கு பொலிஸார் கொண்டு வர முற்பட்ட போது கெம்பியன் நகர
மக்களுக்கும் பொலிஸாருக்கும் இயிடையில் அமைதியின்மை ஏற்பட்டது குறித்த
பேருந்தினை இங்கிருந்து கொண்டு செல்ல முடியாது என பொதுமக்கள் எதிரப்பினை
வெளிபடுத்தினர்

பேருந்தின் சாரதி பொகவந்தலாவ பொலிஸாரினால் கைது செய்யபட்டு தடுப்பு
காவலில் வைக்கபட்டுள்ளதாகவும் சம்பவம் தொடர்பில் பொகவந்தலாவ பொலிஸார்
விசாரனைகளை ஆரம்பித்துள்ளதாகவூம் பொலிஸார் மேலும் குறிப்பிட்டனர்.PHOTOS 02

 

(பொகவந்தலாவ நிருபர் எஸ்.சதீஸ்)

Leave a Reply

error: Content is protected !!