முகப்புஎம்மை பற்றிவிளம்பரம்செய்திகள்தொடர்பு
Home > Slider > தமிழ் சிங்கள சித்திரை புத்தாண்டினை முன்னிட்டு சூப்பர் ஸ்டார் விளையாட்டு கழகத்தினால் ஏற்பாடு செய்யபட்டிருந்த மென் பந்து கிரிகெட் சுற்று போட்டி!!

தமிழ் சிங்கள சித்திரை புத்தாண்டினை முன்னிட்டு சூப்பர் ஸ்டார் விளையாட்டு கழகத்தினால் ஏற்பாடு செய்யபட்டிருந்த மென் பந்து கிரிகெட் சுற்று போட்டி!!

தமிழ் சிங்கள சித்திரை புத்தாண்டினை முன்னிட்டு பொகவந்தலாவ லெச்சுமிதோட்டம் மத்திய பிரிவின் சூப்பர் ஸ்டார் விளையாட்டு கழகத்தின் ஏற்பாட்டில் மாபெரும் மென்பந்து கிரிகெட் சுற்று போட்டி ஒன்று ஏற்பாடு செய்யபட்டது இதில் ஆறு அணிகள் பங்கு பற்றியதோடு இறுதிபோட்டி 16.04.2019.செவ்வாய்கிழமை ரேட்பேக் ஈகல்ஸ் அணிக்கும் கிங்ஸ்கோபுரா அணிக்கும் இடம்பெற்றது இதன் போது முதலில் துடுப்பெடுத்து ஆடிய ரேட்பேக் ஈகல்ஸ் ஆணியினர் நிர்னயிக்கபட்ட 05ஒவரில் இரண்டு விக்கட்டுகளை இழந்து 95 ஓட்டங்களை பெற்றது.

இதன் போது பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய கிங்ஸ்கோபுரா அணியினர் நிர்ணயிக்கபட்ட 05ஒவரில் 06விக்கெட்டுகளை இழந்து 63ஒட்டங்களை மாத்திரம் பெற்று தோல்யிடைந்தது. இதில் முதலாம் இடத்தை ரேட்பேக் ஈகல்ஸ் அணியினர் பெற்று கொண்டதோடு இரண்டாம் இடத்தை கிங்ஸ்கோபுரா அணியினரும் மூன்றாம் இடத்தை டெரகன் ஓரியஸ் அணியும் நான்ங்காம் இடத்தை டெஸ்மோனியின் டைகர்ஸ் ஐந்தாம் இடத்தை லயன் டயனமிக் அணியினரும் 06ம் இடத்தை குயின்ஸ் லைன்புலு அணியினரும் பெற்று கொண்டதோடு போட்டியில் கலந்து கொண்ட அணியினருக்கு வெற்றி கேடயங்களும் பதக்கங்களும் வழங்கி வைக்கபட்டமை குறிப்பிடதக்கது.

06 07 13 18

 

(பொகவந்தலாவ சதீஸ்)

Leave a Reply

error: Content is protected !!