முகப்புஎம்மை பற்றிவிளம்பரம்செய்திகள்தொடர்பு
Home > Slider > ஸ்டொனிக்கிளிப் பகுதியின் சிறுத்தை இறந்த நிலையில் மீட்கப்பட்டது அருகில் நாயின் தலையும் இணங்காணப்பட்டது!!

ஸ்டொனிக்கிளிப் பகுதியின் சிறுத்தை இறந்த நிலையில் மீட்கப்பட்டது அருகில் நாயின் தலையும் இணங்காணப்பட்டது!!

கொட்டக்கலை பிரதேச சபைக்கு உட்பட்ட ஸ்டொனிக்கிளிப் பகுதியில் சிறுத்தையின் உடலொன்று இறந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளதோடு அருகில் நாயொன்றின் தலையும் காணப்பட்டுள்ளமை மக்களிடத்தே பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஸ்டொனிக்கிளிப் தோட்டத்தில் அடிக்கடி சிறுத்தையின் நடமாட்டம் அதிகமாகவே காணப்படுகின்றது.ஏற்கனவே ஓர் சிறுத்தை பன்றி வலையில் சிக்கி உயிரிழந்து காணப்பட்டது.அந்தவரிசையில் மீண்டும் அப்பகுதியில் 5அடி நீளமுடைய சிறுத்தையொன்று அடையாளங்காணப்பட்டுள்ளது.காலை 7 மணியளவில் தேயிலை மலைக்கு சென்ற தோட்ட தொழிலாளர்களே இணங்கண்டுள்ளனர்.

அதுமட்டுமல்லாமல் சிறுத்தையின் உடலின் அருகில் நாயியொன்றின் தலையும் அதனோடு நாயின் கால்களையும் இணங்கண்டுள்ளனர்.இது தொடர்பாக குறித்த பிரதேச மக்கள் குறிப்பிடுகின்ற போது சமீப காலமாகவே இவ்வூரில் நாய்களின் எண்ணிக்கை குறைந்து வருகின்றது.இந்நிலை சம்பந்தமாக கருதுகையில் நாயிற்கும் சிறுத்தைக்கும் இடையில் நீண்ட நேரம் சண்டை இடம்பெற்றிருக்கலாம் அச்சமயம் சிறுத்தை நாயை தாக்கி அதன் உடலை உண்டதாலே இறந்திருக்க கூடும் என குறிப்பிடுவதோடு மேலதிக விசாரணைகளை பத்தனை பொலீசார் முன்னெடுத்து வருகின்றனர்.

IMG-20190417-WA0033 IMG-20190417-WA0035

தகவல்: நீலமேகம் பிரசாந்த்

Leave a Reply

error: Content is protected !!