முகப்புஎம்மை பற்றிவிளம்பரம்செய்திகள்தொடர்பு
Home > உலகம் > இணையத்தைக் கலக்கிய ‘தங்கமனிதர்’ கல்லால் அடித்துக் கொலை!

இணையத்தைக் கலக்கிய ‘தங்கமனிதர்’ கல்லால் அடித்துக் கொலை!

புனே – சுமார் ஒன்றரை கோடி இந்திய ரூபாய் மதிப்புள்ள தங்க நகைகளை அணிந்து இணையத்தைக் கலக்கிய புனேவைச் சேர்ந்த ‘தங்கமனிதர்’ தத்தாத்ரே புஜே, கல்லால் அடித்துக் கொலை செய்யப்பட்டார்.

கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு, சுமார் 3.5 கிலோ எடையுடன், 22 காரட் தங்கத்தினால், 15 கலைஞர்களின் உழைப்பில் உருவாக்கப்பட்ட தங்க சட்டையை அணிந்து வலம் வந்தார் தத்தாத்ரே.

உலகிலேயே மிகவும் மதிப்பு வாய்ந்த சட்டையாக அது கருதப்பட்டது.

இந்நிலையில், வியாழக்கிழமை இரவு நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட பின், தனது மகனுடன் காரில் சென்று கொண்டிருந்த அவரை கும்பல் ஒன்று காரிலிருந்து வெளியே இழுத்துப் போட்டு கல்லால் தாக்கிக் கொலை செய்துள்ளது.

Leave a Reply

error: Content is protected !!