முகப்புஎம்மை பற்றிவிளம்பரம்செய்திகள்தொடர்பு
Home > Slider > அட்டன் அந்தோனியார் தேவஸ்தானத்திற்கு வருகை தந்த இரண்பேர் உட்பட 07பேர் அட்டன் பொலிஸ்நிலையத்தில் ஆஜர்!!

அட்டன் அந்தோனியார் தேவஸ்தானத்திற்கு வருகை தந்த இரண்பேர் உட்பட 07பேர் அட்டன் பொலிஸ்நிலையத்தில் ஆஜர்!!

 

கடந்த மாதம் 07ம் திகதி இஸ்லாமிய மதத்தை சேர்ந்த இரண்டு இளைஞர்கள் அட்டன் அந்தோனியார் தேவஸ்தானத்திற்கு வருகை தந்தமை தொடர்பில் அட்டன் பொலிஸாரினால் விசாரனைகள் மேற்கொள்ளபட்டு வந்தமை தொடர்பில் அட்டன் அந்தோனியார் தேவஸ்தானத்தின் சீ.சீ.டிவி.கேமராவில் பதிவாகியிருந்த கானொளிகளுக்கு அமைய விசாரனைகளை மேற்கொண்டதற்கு அமைய ஊடகங்களின் ஊடாக குறித்த செய்தி ஒளிபரப்பபட்டதற்கு அமைய குறித்த இரண்டு இளைஞர்கள் உட்பட மொத்தம் 07இளைஞர்கள் 07.05.2019.செவ்வாய்கிழமை காலை அட்டன் பொலிஸ்நிலையத்தில் ஆஜராகியுள்ளதாக அட்டன் பொலிஸார் தெரிவித்தனர்குறித்த இந்த இளைஞர்கள் கொழும்பு வெள்ளம்பிட்டிய பகுதியை சேர்நதவர்கள் எனவும் கடந்த 07ம் திகதி தொழுகைக்காக வருகை தந்த இவர்கள் மலையக பகுதி ஒரு அழகானபிரதேசம் என்ற அடிப்படையில் தான் நாங்கள் பார்வையிட வந்துள்ளதாக அட்டன் பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரனைகளில் இருந்து தெரியவந்துள்ளது எனவே இந்த இஸ்லாம் மதத்தை சேர்ந்த இளைஞர்கள் பயங்கரவாதத்தோடு எவ்வித தொடர்புகளும் இல்லையெனவும் பொலிஸார் தெரிவித்தனர்

கொழும்பு பிரதான பள்ளிவாசலில் இருந்து ஜமாத் தொழுகைக்காக நாட்டில் உள்ள ஒவ்வொரு பிரதேசத்தில் உள்ள பள்ளிவாசல்களுக்கு தொழுகைக்காக அனுப்பிவைக்கபட்டதாகவும் இவர்கள் அட்டன் பகுதிக்கு வருகை தந்தது இதுவே முதல் தடவை அதன் அடிப்படையில் குறித்த இரண்டு இந்த இளைஞர்களும் கடந்த 07ம் திகதி அட்டன் பள்ளிவாசலுக்கு வருகை தந்து பழமைவாய்ந்த அட்டன் அந்தோனியார் தேவஸ்தானத்தை பார்வையிட சென்றபோது தேவஸ்தானத்தின் பூஜை ஆரம்பநிகழ்விற்காக தேவஸ்தானத்தில் பொருத்தபட்டிருந்த ஓசைமணி சத்தத்தினை கேட்டபிறகு இவர்கள் பயத்தில் சென்றதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்ததனர்

இதேவேலை குறித்த இளைஞர்கள் தமது பெற்றோரோடு பொலிஸ்நிலையத்திற்கு வருகை தந்துள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டனர் எனவே சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரனைகளை அட்டன் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடதக்கது.

1 (1) 2 (2) 4 (1)

 

(பொகவந்தலாவ நிருபர் எஸ்.சதீஸ்)

Leave a Reply

error: Content is protected !!