முகப்புஎம்மை பற்றிவிளம்பரம்செய்திகள்தொடர்பு
Home > Slider > அட்டன் தனியார் பேருந்து தரிப்பிடத்துக்கு அருகாமையில் உள்ள மலசலகூடத்திற்கு அருகில் இராணுவத்தினரின் சீருடை மற்றும் தொப்பி ஒன்றும் மீட்பு!!

அட்டன் தனியார் பேருந்து தரிப்பிடத்துக்கு அருகாமையில் உள்ள மலசலகூடத்திற்கு அருகில் இராணுவத்தினரின் சீருடை மற்றும் தொப்பி ஒன்றும் மீட்பு!!

அட்டன் தனியார் பேருந்து தரிப்பிடத்திற்கு அருகாமையில் உள்ள மலசலகூடத்திற்கு அருகாமையில் கொட்டபட்டிருந்த குப்பைமேட்டில்
இரானுவத்தினரின் சீறுடை ஒன்றும் இரானுவத்தினரின் தொப்பி ஒன்றும் அட்டன்
பொலிஸாரினால் மீட்கபட்டுள்ளது இந்த சம்பவம் 07.05.2019. செவ்வாய்கிழமை
காலை 09மணி அளவில் மீட்கபட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்

தனியார் பேருந்து தரிப்பிடத்திற்கு அருகாமையில் நடமாடிய பொதுமக்களால்
வழங்கபட்ட தகவலுக்கு அமைய சம்பவ இடத்திற்கு வந்த அட்டன் பொலிஸார் மற்றும் இராணுவத்தினர் இனைந்து குறித்த சீருடையை மீட்டுள்ளனர்

சம்பவம் தொடர்பில் விசாரனைகளை ஆரம்பித்துள்ள பொலிஸார் இதுவரையிலும்
சந்தேக நபர்கள் எவரும் கைது செய்யபடவில்லையெனவும் யாராவது குறித்த
சீருடையயை கொண்டுவந்து குறித்த இடத்தில் போட்விட்டு சென்று இருக்கலாம் என அட்டன் பொலிஸார் சந்தேகிக்கின்றனர்

சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரனைகளை அட்டன் பொலிஸார் மேற்கொண்டு
வருகின்றமை குறிப்பிடதக்கது.

02 03 09 10

 

எஸ்.சதீஸ், க.கிஷாந்தன்

Leave a Reply

error: Content is protected !!