முகப்புஎம்மை பற்றிவிளம்பரம்செய்திகள்தொடர்பு
Home > Slider > நுவரெலியா மாவட்டத்தில் பிரதேச செயலகங்கள் அதிகரிப்பது தமிழ் முற்போக்கு கூட்டணிக்கு கிடைத்த வெற்றி – அமைச்சர் திகாம்பரம்

நுவரெலியா மாவட்டத்தில் பிரதேச செயலகங்கள் அதிகரிப்பது தமிழ் முற்போக்கு கூட்டணிக்கு கிடைத்த வெற்றி – அமைச்சர் திகாம்பரம்

நுவரெலியா மாவட்டத்தின் பிரதேச செயலகஙலகள்ளின் எண்ணிக்கையை ஐந்தில் இருந்து பத்தாக உயர்த்துவதற்கு அமைச்சரவை அனுமதி அளித்தமையானது தமிழ் முற்போக்கு கூட்டணியின் ஒற்றுமைக்கும் அர்ப்பணிப்புக்கும் கிடைத்த வெற்றி என மலைநாட்டு புதிய கிராமங்கள் அமைச்சர் பழனி திகாம்பரம் நேற்று தெரிவித்துள்ளார்.நுவரெலியா மாவட்டத்தின் பிரதேச செயலகங்களின் எண்ணிக்கையை ஐந்தில் இருந்து பத்தாக உயர்த்துவதற்கான அமைச்சரவை அனுமதி அளித்துள்ளது. உள்நாட்டு அலுவல்கள் மாகாண சபைகள் உள்ளூராட்சி அமைச்சர்

வஜிர அபேவர்தன சமர்ப்பித்த அமைச்சரவை அனுமதி பத்திரத்திக்கே இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது. முன்னதாக தமிழ் முற்போக்கு கூட்டணி பாராளுமன்றத்தில் இதற்கான பிரேரணை முனவைக்கப்பட்மிருந்ததுடன் தலைவர் மனோ கணேசன் தலைமையில் அமைச்சர் வஜிர அபேவர்தனவுடன் பல சுற்றுப் பேச்சுவார்த்தைகளை நடாத்தியிருந்தது.

இதன்படி தற்போது செயற்பாட்டில் உள்ள அம்பகமுவை, நுவரெலியா, கொத்மலை, வலப்பனை, ஹங்குராங்கத்தை ஆகிய ஐந்து பிரதேச செயலக பிரிவுகளிலும் மேலதிகமாக ஐந்து பிரதேச செயலகங்கள் அமையப்பெறவுள்ளன. ஒரு பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட பிரதேசத்தில் இரண்டு லட்சத்துக்கு அதிகமான சனத்தொகையினருக்கு சேவையாற்ற வேண்டிய நிலையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது.

இதன்படி நோர்வூட், தலவாக்கலை, திஸ்பன, ராகலை, மத்துரட்ட ஆகிய பகுதிகளில் புதிய பிரதேச செயலகங்கள் விரைவில் அமையப்பெறவுள்ளது. ஏற்கனவே பிரதேச சபைகள் அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில் பிரதேச செயலகங்களின் அதிகரிப்பானது நுவரெலியா மாவட்ட மக்களுக்கு பெரும் வரப்பிரசாதமாகும்.

 

(பொகவந்தலாவ நிருபர் எஸ்.சதீஸ்)

Leave a Reply

error: Content is protected !!