முகப்புஎம்மை பற்றிவிளம்பரம்செய்திகள்தொடர்பு
Home > Slider > பெருந்தோட்ட பாதுகாப்பு குறித்து தொண்டாமானும், முதலாளிமார் சம்மேளனமும் சந்தித்து பேச்சு!!

பெருந்தோட்ட பாதுகாப்பு குறித்து தொண்டாமானும், முதலாளிமார் சம்மேளனமும் சந்தித்து பேச்சு!!

கடந்த 21 ம் திகதி இடம்பெற்ற குண்டு வெடிப்பு தாக்குதலையடுத்து பெருந்தோட்டங்கள் மற்றும் தேயிலை தொழிற்சாலைகளின் பாதுகாப்பு குறித்து
முதலாளிமார் சம்மேளனத்திற்கும் இலங்கை தொழிலாளர் காங்ரஸின் தலைவரும் பாராளுமன் ற உறுப்பினர் ஆறுமுகம் தொண்டமான் உள்ளிட்ட குழுவினரும் இடையில் விசேட கலந்துரையாடலொன்று (07) முதலாளிமார் சம்மேளனத்தின் கொழும்பு ராஜகிரயவிலுள்ள தலைமை காரியாலயத்தில் இடம்பெற்றது

இந்த சந்திப்பின் போது தேயிலை பெருந்தோட்டங்கள், மற்றும் தேயிலை
தொழிற்லைகளினதும் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில் தோட்டங்கள் தேரும் குழுக்களை அமைத்து பதுகாப்பு நடவடிக்கையை முன்னெடுக்க இனக்கப்பாடு எட்டப்பட்டது.

இக் கலந்துரையாடலில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின்
பொதுச்செயலாளர் அனுஷியா சிவராஜா, ஊவா மாகாண தமிழ் கல்வி அமைச்சர்
செந்தில் தொண்டமான் உட்பட முதலாளிமார் சம்மேளனத்தின் செயலாளர்,
சம்மேளனத்தின் முக்கியஸ்தர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.

 

எஸ்.சதீஸ், எம் கிருஸ்ணா

Leave a Reply

error: Content is protected !!