பொகவந்தலாவ கெம்பியனில் கால்வாய் ஒன்றில் இருந்து ஆண் ஒருவரின் சடலம் மீட்பு

பொகவந்தலாவ கெம்பியனில் கால்வாய் ஒன்றில் இருந்து ஆண் ஒருவரின் சடலம் மீட்பு

பொகவந்தலாவ பொலிஸ்பிரிவிற்குட்பட்ட பொகவந்தலாவ கெம்பியன் மேல்பரிவு
தோட்டபகுதியில் 10ம் இலக்க லயன் தொடர் லயன் குடியிருப்பு அருகாமையில்
உள்ள கால்வாய் ஒன்றில் இருந்து ஆண் ஒருவரின் சடலம் மீட்கபட்டுள்ளதாக
பொகவந்தலாவ பொலிஸார் தெரிவித்தனர் இந்த சம்பவம் 13.05.2019.திங்கள் கிழமை விடியற்காலை 06.45 மணி அளவில் மீட்கபட்டுள்ளதாக பொகவந்தலாவ பொலிஸார் மேலும் தெரிவித்தனர்

இன்று காலை தமது காலை கடன்களை முடித்து கொண்டு சென்ற பெண் ஒருவர் தமது வீட்டினை நோக்கி சென்று கொண்டிருந்த போது குறித்த லயன் குடியிருப்பின்
அருகாமையில் உள்ள கால்வாய் ஒன்றில் ஒருவர் தலைகிழாக கிடந்ததை கண்ட குறித்த பெண் அயல்வர்களிடம் அறிவித்ததை தொடர்ந்து தோட்ட பொதுமக்களால் 1990 என்ற அவசர நோயாளர் காவு வண்டிக்கு தகவல் வழங்கியதை அடுத்து குறித்த நபரை ஏற்றிசெல்ல வந்த நோயாளர் காவுவண்டியின் அதிகாரிகளால் குறித்த நபர் உயிர் இழந்துள்ளதாக அறிவிக்கபட்டதை தொடர்ந்து சம்பவம் தொடர்பில் பொகவந்தலாவ பொலிஸாருக்கு தகவல் வழங்கபட்டுள்ளதாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரனைகளில் இருந்து தெரியவந்துள்ளது

சம்பவ இடத்திற்கு தடையியல் பொலிஸார் வரவலைக்கபட்டு விசாரனைகளை
மேற்கொண்டபோது சடலமாக மீட்கபட்டபட்டவரின் தலைபகுதியின் வலது பக்கம் பாரிய வெட்டுகாயங்கள் இருப்பதாக தெரிவித்தனர் சடலமாக மீட்கபட்டவர் திருமணமாகாத 60வயது கொண்ட குழந்தை மாயாண்டி என்ற நபரே இவ்வாறு சடலமாக மீட்கபட்டதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

இந்த நபர் தனது சசோதரனுடைய மகனை பார்ப்பதற்கு பொகவந்தலாவ ஆல்டி தோட்டபகுதிக்கு சென்று வருவதாக கூறி வீட்டைவிட்டு சென்ற நபர் நேற்று இரவு வீடு வரவில்லையெனவும் இன்று காலை அயலவர்களால் இந்த நபர் கால்வாய் ஒன்றில் கிடப்பதாக தமக்கு தெரியவந்துள்ளதாக சடலமாக மீட்கபட்டவரின் சகோதரனுடைய மகள் பொலிஸாருக்கு வாக்குமுல் வழங்கிய தாக தெரிவிக்கபடுகிறது

எனவே சம்பவம் தொடர்பில் மரண விசாரனைகளுக்காக ஹட்டன் நீதிமன்ற நீதவான் சம்பவ இடத்திற்கு வரவழைக்கபட்டு விசாரனைகள் இடம் பெற்றவுடன் சடலம் சட்டவைத்திய அதிகாரியின் பிரேத பரீசோதனைக்காக சடலம் நாவபிட்டி
ஆதாரவைத்தியசாலைக்கு அனுப்பிவைக்கபட்டு பிரேத பரீசோதனையின் பின்னர்
சடலம் உறவினர்களிடம் கையளிக்கபட உள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்

சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரனைகளை பொகவந்தலாவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடதக்கது.

 

01 03 05 08 09 (1)

(பொகவந்தலாவ நிருபர் எஸ்.சதீஸ்)

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )
mersin escort mersin escort mersin escort mersin escort mersin escort mersin escort kayseri escort konya escort malatya escort malatya escort erotik film film izle komedi film izle
error: Content is protected !!