முகப்புஎம்மை பற்றிவிளம்பரம்செய்திகள்தொடர்பு
Home > Slider > மலையக மாணவர்களை அச்சம் இன்றி பாடசாலைகளுக்கு அனுப்பலாம்; போலீசார் தெரிவிப்பு!

மலையக மாணவர்களை அச்சம் இன்றி பாடசாலைகளுக்கு அனுப்பலாம்; போலீசார் தெரிவிப்பு!

தொடர் குண்டு தாக்குதலின் அச்சம் காரணமாக இன்று நாட்டில் பாடசாலைகளில் நாளாந்தம் மாணவர்களின் வருகை கூடி குறைந்து வருகின்றது. இதனால் பாடசாலைகளில் உரிய முறையின் கல்வி நடவடிக்கைகளை முன்னெடுத்து செல்லக் கூடிய நிலை காணப்படவி;ல்லை இன் நிலை தொடருமாயின் மாணவர்களின் கல்வியில் எதிர்காலத்தில் பாதிப்பு ஏற்படவும் நாட்டில் அசாதாண நிலை ஏற்படவும் வாய்புகள் காணப்படுகின்றன.

இதற்கு உறுதிப்படுத்தபடாத செய்திகள்¸ வாய்பேச்சுக்கள்¸ விசமிகளின் பொய் பிரசாரம் சமூக வளைத்தளங்களின் முறையற்ற பாவனைகள் காரணமாக இருக்கின்றன. இதனால் பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை பாடசாலைகளுக்கு அனுப்புவது இல்லை. ஆசிரியர்கள் வந்தாலும் மாணவர்கனின் வருகை போதுமானதாக இல்லாதததால் கல்வி நடவடிக்கைகளை மேற்க் கொள்ள முடியவில்லை. இதற்கு அச்சழும் ஒரு காரணமாக இருக்கின்றது.

இவ்வாறான நிலையில் மலையக தோட்டபுர பாடசாலைகளுக்கு பிரதேச பொலிஸ் நிலைய பொருப்பு அதிகாரிகளுடன் பிரிவுகளுக்கு பொருப்பான உதவி பொலிஸ் அத்தியஸ்த்தர் உட்பட உயர் பொலிஸ் அதிகாரிகள் பெற்றோர்களுக்கும் அதிபர் ஆசிரியர்கள’ மாணவர்களுக்கு விழிப்புனர்வு செயல் அமர்வுகளை நடாத்தி வருகின்றனர். இதன் போது பாடசாலையின் பாதுகாப்பு¸ மாணவர்களின் பாதுகாப்பு¸ பொய் வாந்திகளின் நன்பகதன்மை முப்படைகளினால் முன்னெடுக்கபட்டுள்ள பாதுகாப்பு நடவடிக்கைகள்¸ பயங்கரவாதிகளை கண்டு பிடிக்கும் உத்திகள்¸ மேலதிகமாக தேவைப்படும் பாதுகாப்பு செயற்பாடுகள்¸ மாணவர்களின் எதிர்காலம் கருதி முன்னெடுக்கபட வேண்டிய கல்வி நடவடிக்கைகளுக்கு முப்படைகளின் பாதுகாப்பு செயற்திட்டங்கள் குறித்து விழக்கம் அளித்து வருகின்றன. இதன் மூலம் உரிய முறையில் பாடசாலைகள் நடைபெருவதற்கு தகுந்த சூழ்நிலையை உரிவாக்க முடியும் என எதிர்பாக்கப்படுகின்றது

இவ்வாறான நிலையில் இன்று 14.05.2019 புஸ்ஸல்லாவ இந்து தேசிய கல்லூரியில் புஸ்ஸல்லாவ பொலிஸ் நிலைய பொருப்பு அதிகாரி பலிபான அவர்களின் ஏற்பாட்டில் கம்பளை பிரிவுக்கு பொறுப்பான உதவி பொலிஸ் அத்தியஸ்த்தர் பலியவதன அவர்களின் விழிப்புனர்வு விரிவுரை மேற்படி பாடசாலையில் நடைபெற்றது.

புhடசாலையின் அதிபர் ஆர்.விஜேந்திரன் தலைமையில் நடைபெற்ற இந் நிகழ்வில் பாடசாலை பெற்றோர் அபிவிருத்தி சங்கத்தின் அங்கத்தினர் ஆசிரியர்கள் உட்பட மாணவர்கள்; கலந்து கொண்டார்கள்.

இதன் போது கருத்து தெரிவித்த கம்பளை பிரிவுக்கு பொறுப்பான உதவி பொலிஸ் அத்தியஸ்த்தர் பலியவதன அவர்கள். கம்பளை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட பாடசாலைகளின் பாதுகாப்பு உருதிபடுத்தபட்டுள்ளது. அனைத்து பாடசாலைகளுக்குமான பாதுகாப்பு வழங்கபட்டுள்ளது. இச் செயற்திட்டத்திற்கு பாடசாலைகளின் அதிபர்கள் ஆசிரியர்கள் மாணவர்களின் பூரண ஒத்துழைப்பை வழங்கி வருகின்றனர். யாரும் பொய் வதந்திகளை நம்ப வேண்டாம். மாணவர்களை பாடசாலைகளுக்கு அனுப்புங்கள். அவசர பாதுகாப்பிற்கு அருகில் உள்ள பொலிஸ் நிலையத்தை தொடர்பு கொள்ளுங்கள்¸ இபபிரதேச பாதுகாப்பிற்கு இராணுவத்தினர் தயாராக உள்ளனர். அதே போல் உளவு பிரிவும் திறம்பட செயற்பட்டு வருகின்றது ஆகவே பாடசாலைகளின் கல்வி நடவடிக்கைளை முன்னெடுத்து செல்லுங்கள். என்று கூறினார்.

பா. திருஞானம் .

Leave a Reply

error: Content is protected !!