முகப்புஎம்மை பற்றிவிளம்பரம்செய்திகள்தொடர்பு
Home > Slider > ஆளுனரின் பணிப்புரைக்கு அமைய மத்திய மாகாணத்தில் உள்ள அனைத்து மதுபானசாலைகளுக்கு பூட்டு

ஆளுனரின் பணிப்புரைக்கு அமைய மத்திய மாகாணத்தில் உள்ள அனைத்து மதுபானசாலைகளுக்கு பூட்டு

 

மத்திய மாகாண ஆளுனர் மைத்திரி குனரத்ன அவர்களின் பணிப்பரைக்கு அமைய மத்திய மாகாணத்தில் உள்ள அனைத்து மதுபாணசாலைகளையும் மூடுமாறு மத்திய மாகாண மதுவ ரிதினைக்களத்தின் பணிப்பாளருக்கு பணிபுரை வழங்கபட்டமைக்கு அமைய அட்டன் பொகவந்தலாவ நோர்வுட் டிக்கோயா மஸ்கெலியா தலவாகலை நுவரெலியாஅக்கரபத்தனை ஆகிய அனைத்து மதுபானசாலைகளும் மூடப்பட்டுள்ளது14.05.2019.செவ்வாய்கிழமை காலை 09 மணிக்கு திறக்கபட்ட மதுபானசாலைகள் அனைத்தும் பிற்பகல் இரண்டு மணி அளவில் அனைத்து மதுபானசாலைகளும் மூடப்பட்டமை குறிப்பிடதக்கது.

எனவே 14.05.2019 செவ்வாய்கிழமை மத்திய மாகாணத்தில் அனைத்து மதுபானசாலைகளும் எதிர் வரும் ஒரு வாரகாலத்திற்கு மத்திய மாகாணத்தில் உள்ள மதுபானசாலைகளை மூடுமாறு மத்திய மாகாணத்தின் ஆளுனர் மைத்திரி குனரத்ன இன்று இடம்பெற்ற விஷேட கலந்தரையாடலின் போது இந்த தீர்மானம் எட்டபட்டதாக தெரிவித்தார்

நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாண சூழ்நிலை குறித்தே இந்த தீர்மானம் எட்டபட்டதாக தெரிவித்தார்.

 

(பொகவந்தலாவ நிருபர் எஸ்.சதீஸ்)

Leave a Reply

error: Content is protected !!