நாட்டின் பல்வேறு பிரச்சினைகள் இருந்தாலும் அரசாங்கம் அபிவிருத்தியை முடக்கவில்லை –  இராதாகிருஸ்ணன் தெரிவிப்பு!!

நாட்டின் பல்வேறு பிரச்சினைகள் இருந்தாலும் அரசாங்கம் அபிவிருத்தியை முடக்கவில்லை – இராதாகிருஸ்ணன் தெரிவிப்பு!!

நாட்டின் பல்வேறு பிரச்சினைகள் இருந்தாலும் அரசாங்கம் அபிவிருத்தியை முடக்கவில்லை. இன்றும் அபிவிருத்தி பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. குறிப்பாக தற்பொழுது மலையக பகுதிகளில் அதிகமான அபிவிருத்திகளை முன்னெடுப்பதற்கு அரசாங்கம் சந்தர்ப்பத்தை வழங்கியுள்ளது. அதன் அடிப்படையில் பாதைகளுக்கு முக்கியத்துவம் வழங்கப்பட்டு அதிகளவான பாதைகள் அபிவிருத்தி செய்யப்பட்டு வருவதாக மலையக மக்கள் முன்னணியின் தலைவரும் தமிழ் முற்போக்கு கூட்டணியின் பிரதி தலைவரும் விசேட பிரதேசங்களுக்கான அபிவிருத்தி அமைச்சருமான வேலுசாமி இராதாகிருஸ்ணன் தெரிவித்துள்ளார்.ரன் மாவத் வேலைத்திட்டத்தின் கீழ் டயகம சந்திரிகாமம் தோட்டத்திற்கான காபட் பாதைக்கான ஆரம்ப வேலைத்திட்டத்தை மலையக மக்கள் முன்னணியின் தலைவரும் தமிழ் முற்போக்கு கூட்டணியின் பிரதி தலைவரும் விசேட பிரதேசங்களுக்கான அபிவிருத்தி அமைச்சருமான வேலுசாமி இராதாகிருஸ்ணன் 14.05.2019 அன்று மாலை ஆரம்பித்து வைத்தார்.

19 மில்லியன் ரூபா செலவில் இந்த பாதை அபிவிருத்தி செய்யப்படுகின்றது.கடந்த 25 வருடங்களுக்கு மேலாக இந்த பாதை அபிவிருத்தி செய்யப்படாமல் இருந்ததுடன் அங்குள்ள பொது மக்கள் பல முறைப்பாடுகளை செய்ததன் பயனாக இந்த பாதை அபிவிருத்தி செய்வதற்கு அமைச்சர் வேலுசாமி இராதாகிருஸ்ணன் நடவடிக்கை மேற்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. இதன் போது வீதி அபிவிருத்தி அதிகாரசபையின் பிரதான பொறியியலாளர் சம்பத் தோட்ட முகாமையாளர் உட்பட பொது மக்களும் கலந்து கொண்டனர்.

இன்று நாட்டில் ஏற்பட்டுள்ள இந்த அசாதாரண சூழ்நிலை காரணமாக எமது பொருளாதாரம் பின்நோக்கி சென்றுள்ளது.குறிப்பாக உல்லாசத்துறை பாரிய பாதிப்படைந்துள்ளது.இதன் காரணமாக எங்களுடைய மலையக இளைஞர் யுவதிகள் கொழும்பிற்கு சென்று தொழில் செய்வதில் பல்வேறு சிரமங்களை எதிர்நோக்கிவருகின்றார்கள்.எனவே இதற்கெல்லாம் நிலையான தீர்வை பெற்றுக் கொள்ள வேண்டுமாக இருந்தால் நாம் அனைவரும் ஒற்றமையாக செயற்பட வேண்டும்.அந்த வகையில் மலையக மக்கள் என்றுமே பயங்கரவாதத்திற்கு துணை போனவர்கள் அல்ல அவர்கள் சமாதானத்தை விரும்புகின்றவர்கள்.

முஸ்லிம்கள் மீது வெறுப்பை காட்டுவதோ அல்லது அவர்களுக்கு எதிரான நடவடிக்கையில் ஈடுபடுவதோ விரும்பத்தகாக ஒரு செயலாகும்.அதன் மூலம் நாம் சர்வதேசத்தின் பகைமையை தேடிக் கொள்ள வேண்டிய ஒரு நிலை ஏற்படும்.முஸ்லிம் நாடுகள் எங்கள் மீது வித்தியாசமான ஒரு பார்வையை செலுத்துவார்கள் அதன் மூலம் பொருளாதார ரீதியிலான பாதிப்பை எதிர்நோக்க வேண்டிய நிலைமை ஏற்படும்.எனவே எந்த காரணம் கொண்டும் முஸ்லிம்களுக்கு பாதிப்பு ஏற்படும் வகையில் நடந்து கொள்ள கூடாது.

இவ்வாறான ஒரு இக்கட்டான சூழ்நிலையில் மற்றவர்களின் மனநிலை எப்படி இருக்கும் என்பதை நாம் நன்கு அறிவோம்.ஏனென்றால் எங்களுக்கு 83 ஆம் ஆண்டு நடைபெற்ற சம்பவம் நினைவில் இருக்கின்றது.அந்த வேலையில் பல சிங்கள சகோதரர்களும் பல முஸ்லிம் சகோதரர்களும் எங்களுடைய உயிர்களை பாதுகாப்பதில் அர்ப்பணிப்புடன் செயற்பட்டார்கள்.அதனை நாம் என்றுமே மறக்க மாட்டோம்.அதே நேரத்தில் ஒரு சில சிஙகளவர்களும் முஸ்லிம்களும் எங்களுடைய உயிர்களுக்கு உடமைகளுக்கும் பாதிப்பை ஏற்படுத்தியதையும் நாம் மறக்கவில்லை.

83 ஆம் அண்டு நடைபெற்ற இனக்கலவரத்தில் பின்னால் இருந்து செயற்பட்டவர்கள் அரசியல்வாதிகள் என்பதையும் நாம் மறக்கவில்லை.எனவே இந்த நாட்டில் தமிழர்களுக்கு இந்த விடயத்தில் உள்ள அனுபவம் வேறு எந்த சமூகத்திற்கும் இல்லை.83 ஆம் ஆண்டு நடைபெற்ற கலவரத்தின் காரணமாக நட்டமடைந்தவர்கள் தமிழர்கள் அல்ல.இந்த நாடே நட்டமடைந்தது.எங்களுடைய தமிழ் வர்த்தகர்கள் கல்விமான்கள் அனைவரும் இந்த நாட்டைவிட்டு வேறு நாடுகளுக்கு புலம்பெயர்ந்து சென்றார்கள்.

எங்களுடைய மக்களின் புலம் பெயர்வு காரணமாக இந்த நாட்டிற்காக சேவை செய்யவேண்டிய வைத்தியர்கள் பொறியியலாளர்கள் என பல்துறை சார்ந்தவர்களின் சேவைகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டது.அதனை இன்று வரை பூர்த்தி செய்ய முடியாமல் இந்த நாடு இருக்கின்றது.எனவே இதனை அனைவரும் உணர வேண்டும்.

இன்று அடாவடித்தினத்தில் ஈடுபடுகின்ற அனைத்து தரப்பினரும் இதனை நன்கு உணர்ந்து கொள்ள வேண்டும்;.எந்த ஒரு நாடும் தனியே ஒரு சமூகத்தை மாத்திரம் கொண்டு முன்னேற்றம் கண்டதாக சரித்திரம் இல்லை.எந்த ஒரு நாட்டில் அனைத்து மக்களும் ஒற்றுமையாக செயற்படுகின்றார்களோ அந்த நாடே அபிவிருத்தியிலும் பொருளாதாரத்திலும் முன்னிலை பெற்று விளங்குகின்றது.எனவே இதனை உணர்ந்து செயற்பட வேண்டும்.எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

 

(க.கிஷாந்தன்)

 55 total views,  6 views today

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )
mersin escort mersin escort mersin escort mersin escort mersin escort mersin escort kayseri escort konya escort malatya escort malatya escort erotik film film izle komedi film izle
error: Content is protected !!