முகப்புஎம்மை பற்றிவிளம்பரம்செய்திகள்தொடர்பு
Home > Slider > 1,200 மொழியாசிரியர்களை சேவையில் இணைத்துக்கொள்ள நடவடிக்கை!!

1,200 மொழியாசிரியர்களை சேவையில் இணைத்துக்கொள்ள நடவடிக்கை!!

800 தமிழாசிரியர்கள், 300 சிங்கள மொழி ஆசிரியர்கள், 100 ஆங்கில மொழி ஆசிரியர்கள் என மொத்தமாக, ஆயிரத்து 300 மொழியாசிரியர்கள் தேசிய ஒருமைப்பாடு, அரச கரும மொழிகள், சமூக மேம்பாடு, இந்து சமய விவகார அமைச்சில் உள்வாங்கப்பட்டு பயிற்றுவிக்கப்படவுள்ளார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், தமிழாசிரியர்கள் சிங்கள கல்வி கூடங்களில் தமிழ் மொழியையும், சிங்கள ஆசிரியர்கள் தமிழ் கல்வி கூடங்களில் சிங்கள மொழியையும், ஆங்கில ஆசிரியர்கள் அவசியமான கல்வி கூடங்களில் ஆங்கில மொழியையும் போதிக்கும் தொழில் வாய்ப்புகளை பெறுவார்கள் எனவும் அமைச்சர் மனோகணேசன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, இவ்வாறு பயிற்றுவிக்கப்படவுள்ளவர்களுக்கு அரச பணியாளர்களுக்கு மொழி கல்வியை போதிக்கும் சந்தர்ப்பங்களும் இவர்களுக்கு கிடைக்கும். இது இவர்களுக்கு நாட்டின் ஒருமைப்பாடு தொடர்பாக பங்களிக்க வாய்ப்புகளாகவும், தொழில் வாய்ப்புகளாகவும் அமையும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Leave a Reply

error: Content is protected !!