முகப்புஎம்மை பற்றிவிளம்பரம்செய்திகள்தொடர்பு
Home > Slider > சிறுத்தை புலியை வேட்டையாடி இறைச்சியினை விற்பனை செய்த சந்தேக நபருக்கு எதிர்வரும் 12ம் திகதி வரை விளக்கமறியளில்..

சிறுத்தை புலியை வேட்டையாடி இறைச்சியினை விற்பனை செய்த சந்தேக நபருக்கு எதிர்வரும் 12ம் திகதி வரை விளக்கமறியளில்..

நோர்வுட் பொலிஸ்பிரிவிற்குட்பட்ட டிக்கோயா டில்லரி கீழ் தோட்டபகுதியில்
சிறுத்தை புலியினை வேட்டையாடி இறைச்சியினை விற்பனை செய்த சந்தேக நபரை எதிர்வரும் 12ம் திகதிவரை விளக்கமறியளில் வைக்குமாறு ஹட்டன் நீதிமன்ற நீதவான் ஜெயராமன் டொர்க்சி உத்திவிட்டுள்ளார் குறித்த சந்தேக நபரை 10.06.2019 திங்கள் கிழமை ஹட்டன் நீதிமன்ற நீதிவான் முன்னிலையில் முன்னிலைபடுத்தபட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கபட்டுள்ளது

09.06.2019 ஞாயிற்று கிழமை டிக்கோயா டில்லரி கீழ் பிரிவு தோட்டபகுதியை
சேர்ந்த நபர் டில்லரி வனபகுதியில் சிறுத்தை புலியினை வேட்டையாடி
இறைச்சினை விற்பனை செய்த சம்பவம் தொடர்பில் நோர்வுட் பொலிஸாருக்கு
கிடைக்க பெற்ற தகவலுக்கு அமைய மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போதே குறித்த சந்தேக நபர் கைது செய்யபட்டுள்ளார்

குறித்த சந்தேக நபர் சிறுத்தை புலியின் தலை மற்றும் கால்கள் எனபவற்றை
புதைத்து வைத்து இருந்தாகவும் இறைச்சியினை சிலருக்கு விற்பனை செய்து
இருந்தாகவும் ஒரு தொகை இறைச்சி மற்றும் சிறுத்தையின் கால்கள் தலை என்பவற்றை பொலிஸார் மீட்டுள்ளதாகவும் தெரிவித்தனர்

விளக்கமறியலில் வைக்கபட்டுள்ள சந்தேக நபர் டிக்கோயா டில்லரி கீழ்பிரிவு
தோட்டபகுதியை சேர்நதவர் என நோர்வுட் பொலிஸார் தெரிவித்துள்ளமை
குறிப்பிடதக்கது.

 

பொகவந்தலாவ நிருபர் எஸ்.சதீஸ்)

Leave a Reply

error: Content is protected !!