முகப்புஎம்மை பற்றிவிளம்பரம்செய்திகள்தொடர்பு
Home > Slider > பொதுமக்கள் பாவனைக்கு பயன்படுத்தும் குடிநீரினை தனியார் தொழிற்சாலைக்கு கொண்டு செல்ல அனுமதி வழங்க முடியாது என ஹட்டன் நீதிமன்றினால் அறிவிப்பு!!

பொதுமக்கள் பாவனைக்கு பயன்படுத்தும் குடிநீரினை தனியார் தொழிற்சாலைக்கு கொண்டு செல்ல அனுமதி வழங்க முடியாது என ஹட்டன் நீதிமன்றினால் அறிவிப்பு!!

நோர்வுட் பொலிஸ்பிரிவிற்குட்பட்ட டிக்கோயா சாஞ்சிமலை மேற்பிரிவு தோட்டபகுதியில் 05ம் இலக்க தேயிலை மலையில் உற்றெடுக்கும் குடி நீரினை மறைத்து டிக்கோயா பிலிங்பொனி தோட்டபகுதியில் உள்ள தனியார் தொழிற்சாலைக்கு கொண்டு செல்லும் வேலைத்திட்டத்திற்கு அனுமதி வழங்க முடியாது என ஹட்டன் நீதிமன்றத்தினால் அறிவிக்கபட்டுள்ளது நோர்வுட் பிரதேசசபையினால் தாக்கல் செய்யபட்ட வழக்கினை 10.06.2019. திங்கள் கிழமை விசாரனைக்கு எடுத்து கொள்ளபட்ட போதே இந்த அறிவிப்பினை ஹட்டன் நீதிமன்ற நீதவான் ஜயராமன் டொர்க்சி அவர்களினால் அறிவிக்கபட்டது

கடந்த நான்கு மாதங்களுக்கு முன்பு டிக்கோயா சாஞ்சிமலை மேற்பிரிவு 05ம் இலக்க தேயிலை மலையில் ஊற்றெடுக்கு நீரினை மறைத்து பிலிங்பொனி பகுதியில் உள்ள தனியார் தொழிற்சாலைக்கு கொண்டு செல்லும் வேலைத்திட்டத்திற்கு பிரதேசமக்களால் தொடர்ந்தும் எதிர்ப்பினை வெளியிட்டு வந்தனர்.

குறித்த இந்த வேலைத்திட்டத்திற்கு நோர்வுட் பிரதேச சபையிடம் களனிவெளி பெருந்தோட்ட நிறுவனம் அனுமதி பெறவில்லையெனவும் குறித்த நீரினை தனியார் தொழிற்சாலைக்கு கொண்டு சென்றால் சுமார் 5000கும் மேற்பட்ட மக்கள் குடி நீர் இன்றி பாதிக்கப்படுகின்றமை தொடர்பில் நோர்வுட் பிரதேசசபையின் அனைத்து உறுப்பினர்களின் ஒத்துழைப்போடு நோர்வுட் பிரதேசசபையினால் வழக்கு தாக்கல் செய்யபட்டமை குறிப்பிடதக்கது.

 

(பொகவந்தலாவ நிருபர் எஸ்.சதீஸ்)

Leave a Reply

error: Content is protected !!