முகப்புஎம்மை பற்றிவிளம்பரம்செய்திகள்தொடர்பு
Home > Slider > நாட்பது வருடத்தில் சாதிக்காததை நான்கு வருடத்தில் சாதித்துள்ளார் திகாம்பரம் – சுரேஸ்குமார் புகழாரம்!!

நாட்பது வருடத்தில் சாதிக்காததை நான்கு வருடத்தில் சாதித்துள்ளார் திகாம்பரம் – சுரேஸ்குமார் புகழாரம்!!

நாட்பது வருட சலுகை அரசியலுக்கு முற்றுபுள்ளி வைத்து நான்கு வருடங்களில்
மலையக மக்களின் உரிமைகளை வென்றெடுக்க அமைச்சர் திகாம்பரம் தலைமைதத்துவம் அளித்து செயற்பட்டுள்ளமை வரலாற்று வெற்றி என்று மஸ்கெலியா பிரதேச சபையின் உறுப்பினரும் மாநெலி வட்டார அமைப்பாளருமான கே.சுரேஸ்குமார் தெரிவித்தார்.

சாமிமலை கவரவில B.பிரிவில் அமைக்கப்பட்டுள்ள 17 வீடுகளின் திறப்பு விழா
நேற்று நடைபெற்றது. நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றிய போது அவர் இவ்வாறு கூறினார்.

கடந்த காலங்களில் சலுகை காட்டியே மலையக மக்களிடம் அரசியலை
முன்னெடுத்தனர். காலம் மாறி 4 வருடங்களில் அமைச்சர் திகாம்பரம் உரிமைசார்
விடயங்களை முன்னெடுத்தமை மலையக மக்களுக்கு கிடைத்த வரலாற்று
வெற்றியாகும்.

இவ்வெற்றியினுடாக பல விடயங்களை அனுபவித்து வருகின்றோம். இன்னும் பல்வேறு மலையக மக்களுக்கு பெறவேண்டிய உரிமைசார் விடயங்களை வெற்றிகொள்ள அமைச்சர் திகாம்பரத்தின் அரசியல் தொழிற்சங்க விடயங்களுக்கு ஆதரவை வழங்க அணிதிரள வேண்டும்.

மாநெலி வட்டாரத்தில் அரசியல் ரீதியாக பலம் பெற்றிருக்கின்ற நாம்
தொழிற்சங்க ரீதியாகவும் பலமடைந்துள்ளோம். இதனை வலுப்படுத்தி தொடர்ந்து
பயணிப்போம் எனவும் தெரிவித்துள்ளார்.

இந்நிகழ்வில், தொழிலார் தேசிய சங்கத்தின் பிரதி தலைவர் உதயகுமார்,
முன்னால் மாகாண சபை உறுப்பினர்களான சோ.ஸ்ரீதரன், எம்.ராம், திருமதி.
சரஸ்வதி சிவகுரூ, பொதுச்செயலாளர், திரு பிலிப், மனிதவள அபிவிருத்தி நிதிய
தலைவர் வி.புத்திரசிகாமனி, தேசிய அமைப்பாளர் நகுலேஸ்வரன், மஸ்கெலியா
பிரதேச சபை உறுப்பினர்களான சுப்பிரமணிம், ராஜ் அசோக் உட்பட பல
முக்கியஸ்தர்கள் கலந்துகொண்டனர்.

 

(நோட்டன் பிரிஜ் நிருபர் )

Leave a Reply

error: Content is protected !!