முகப்புஎம்மை பற்றிவிளம்பரம்செய்திகள்தொடர்பு
Home > Slider > பெயருக்கு கலக்கம் ஏற்படுத்தியவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை தொடருவேன்- திணேஸ் கிஷாந்த லங்காகீகனகே தெரிவித்தார்!!

பெயருக்கு கலக்கம் ஏற்படுத்தியவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை தொடருவேன்- திணேஸ் கிஷாந்த லங்காகீகனகே தெரிவித்தார்!!

நுவரெலியா நகரை பிரதநிதிப்படுத்தும் அரசியல்வாதிகள் சிலர் இளம் அரசியல் தலைமுறையை சேர்ந்த தனது பெயருக்கு தனது பெயருக்கும், எனது தந்தையின் பெயருக்கும் கலங்கத்தை ஏற்படுத்தி வருவதாக தெரிவிக்கும் மக்கள் ஜனநாயக முன்னணியின் நுவரெலியா மாவட்ட அமைப்பாளர் திணேஸ் கிஷாந்த லங்காகீகனகே அவ்வாறானவர்களுக்கு எதிராக நீதிமன்றம் செல்ல போவதாகவும் தெரிவித்தார்.

இது தொடர்பில் ஊடகவியளாலர்களுக்கு விளக்கமளிக்கும் வகையில் ஊடகசந்திப்பு ஒன்றை நுவரெலியா கூட்டுறவு சங்க விடுதியில் நடத்திய அவர் ஆங்கு விளக்கமளிக்கையில் மேலும் தெரிவித்ததாவது.

முன்னாள் இராணுவ தளபதியும், எம்.பியுமான பீல்ட் மார்ஷல் சரத் பொண்சேகாவின் தலைமையில் இயங்கிய மக்கள் ஜனநாயக முன்னணியின் நுவரெலியா மாவட்ட அமைப்பாளராக செயற்பட்டு கடந்த காலங்களில் பல தேர்தல்களுக்கும் வேட்பாளராக முகம் கொடுத்துள்ளேன்.

நுவரெலியா நகரசபை பிரதேசத்தில் மக்கள் நலன் சார்ந்த பல்வேறு அபிவிருத்தி சங்கங்கள் மற்றும் மக்கள் அபிவிருத்தி பணிகளிலும் தன்னால் இயன்ற உதவிகளை செய்து வந்துள்ளேன்.

மக்கள் ஜனநாயக முன்னணியை வளர்த்தெடுப்பதில் எம்.பியும் முன்னாள் இராணுவ தளபதியுமான பீல்ட்மார்ஷல் சரத் பொண்சேகாவின் வழிகாட்டலின் பேரில் மக்கள் பணியை இன்றும் செய்துவருகின்றேன்.

இந்த நிலையில் எமது முன்னணி ஐக்கிய தேசிய கட்சியுடன் இணைந்து செயற்படும் இக்காலகட்டத்தில் எனது தந்தை நுவரெலியா மாநகர சபையின் ஐக்கிய தேசிய கட்சியின் உறுப்பினராக செயற்படுகின்றார்.

எனினும் நான் பொது அமைப்புகள், மக்கள் சேவைகளில் தொடர்ந்தும் செயலாற்றி வருவதுடன் இந்த நாட்டில் எதிர்வரும் காலத்தில் நடைபெறவுள்ள மத்திய மாகாண சபை தேர்தலில் பீல்ட் மார்ஷல் சரத் பொண்சேகாவின் தலைமையில் வேட்பாளராகவும் களம் இறங்க மக்கள் ஆதரவும் எனக்குள்ளது.

இதனை விரும்பத்தகாத நுவரெலியா மாநகர பிரதேசத்தை பிரதநிதித்துவம் படுத்தி மக்களால் ஓரங்கட்டப்பட்ட அரசியல்வாதிகள் சிலர் எனக்கெதிராகவும், எனது இளம் அரசியல் உள்வாங்களுக்கு எதிராகவும் எனக்குள்ள மக்கள் சக்தியை சீர்குலைக்கும் வகையில் அறிக்கைகளை வெளியிட்டு வருகின்றனர்.

இவ்வாறான செயற்பாடுகள்
கடந்த வாரத்தில் நுவரெலியாவில் இடம்பெற்றுள்ளதுடன் , எனது நற் பெயருக்கு பாரியார் கலங்கத்தையும் எங்கள் அரசியல் குடும்பத்தினருக்கு அவப்பெயரையும் ஏற்படுத்தியுள்ளனர்.

அந்தவகையில் நவரெலியாவில் காணிக்கை சூறையாடும் நகராகவும், கொலைக்கார நபராகவும் எனது பெயருக்கு ஆதாரமற்ற வகையில் கலங்கத்தை ஏற்படுத்தியுள்ளனர்.

நான் அப்படிபட்டவன் அல்ல என்பதை சட்டத்தின் முன் ஆதாரத்துடன் தெரிவிக்க என்னால் முடியும் என்பதால் இவ்வாறானவர்களுக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை தொடரவுள்ளேன்.

அத்துடன் கடந்த காலங்களில் நுவரெலியாவின் அரசியல் நடவடிக்கையில் இந்த நாட்டின் முக்கியமான அரசியல் வாதிகளின் பெயரை பாவித்து மக்களை பயமூர்த்தலுக்கு உள்ளாக்கி நுவரெலியாவின் பார்வைக்கிடமான இடங்களை வளைத்து கொண்டுள்ள சில அரசியல் தலைமை களுக்கு எதிராக செயல்படுவதாக தெரிவிக்கப்பட்டதும் என் மீது கலங்கத்தை ஏற்படுத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் ஊடகங்களும் எனக்கு எற்பட்டுள்ள நிலையை கண்டறிந்துகொள்ள வினயத்துடன் கேட்டுக்கொள்ளும் அதேநேரத்தில் விரைவில் எனது இளம் அரசியல் பயணத்தை தொடரவிடாமல் கலங்கத்தை உண்டுப்பண்னும் நபர்களை நீதிமன்றில் நிறுத்துவேன் என்பதையும் நான் மதிக்கும் ஊடகவியலாளர்களின் கவனத்திற்கு கொண்டு வருவதாகவும் இதன் போது மேலும் தெரிவித்தார்.

 

 

டி.சந்ரு.

Leave a Reply

error: Content is protected !!
lida bakırköy escort ataköy escort porno izle izmir escort avcılar escort beylikdüzü escort ataköy escort avcılar escort bursa escort denizli escort bahis forum sakarya travesti Ataşehir escort Kadıköy escort Ankara escort Beylikdüzü escort Ankara escort ankara travesti