முகப்புஎம்மை பற்றிவிளம்பரம்செய்திகள்தொடர்பு
Home > Slider > அட்டனிலும் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்துகள் பணிபகிஷ்கரிப்பில்….

அட்டனிலும் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்துகள் பணிபகிஷ்கரிப்பில்….

இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்துகள் 13.06.2019 வியாழகிழமை காலையில் இருந்து நாடளாவிய ரிதியில் பணிபகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளனர்அந்த வகையில் இன்றைய தினம் ஹட்டன் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்துகள் பாடசாலை சேவையினை முடித்து கொண்டு காலை 08மணியில் இருந்து பணிபகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளனர்

இலங்கை போக்குவரத்து சபையின் கீழ் பணிபுரியும் அனைத்து பேருந்துகளின்
சாரதிகள் மற்றும் நடத்தனர்களின் நிலுவை பணம் வழங்காமைக்கு எதிர்ப்பு
தெரிவித்தும் நீண்டகாலமாக பணிபுரிந்து வரும் உத்தியோகத்தர்களின் பதவி
உயர்வு தொடர்பிலும் பணிபகிஷ்கரிப்பு முன்னெடுக்கபடுகின்றமையால் பயணிகள்
பெரிதும் பாதிக்கபட்டுள்ளனர்

இதனால் ஹட்டன் கொழும்பு நுவரெலியா கண்டி மஸ்கெலியா பொகவந்தலாவ தலவாகலை டயகம மற்றும் ஏனைய பகுதிகளுக்கு செல்லும் பயணிகள் பெரிதும்
பாதிக்கபட்டுள்ளதோடு காலை வேலையில் தொழிலுக்கு செல்லும் அரச
உத்தியோகத்தர்கள் மற்றும் ஏனையோரும் பாதிகக்பட்டுள்ளதாக பயணிகள்
தெரிவிக்கின்றனர்.

இதேவேலை ஹட்டன் இலங்கை பேருந்து சபைக்கு சொந்தமான 90பேருந்துகளும் இன்றைய தினம் சேவையில் ஈடுபடாமல் பணிபகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளதோடு தமது கோரிக்கைகளுக்கு அரசாங்கம் செவிசாய்த்து தமது கோரிக்கைகளை நிறைவேற்றபட வேண்டும் எனவும் தெரிவித்தனர்.

 

(பொகவந்தலாவ நிருபர் எஸ்.சதீஸ்)

Leave a Reply

error: Content is protected !!