தலவாகலை நகரில் தலவாகலை லிந்துளை நகரசபையின் அனுமதி பெறாது மருத்துவமனையை நடாத்திவந்த வைத்தியர் ஒருவர் கைது!!

தலவாகலை நகரில் தலவாகலை லிந்துளை நகரசபையின் அனுமதி பெறாது மருத்துவமனையை நடாத்திவந்த வைத்தியர் ஒருவர் கைது!!

தலவாகலை நகரில் தலவாகலை லிந்துளை நகரசபையின் அனுமதி பெறாது சுமார் இரண்டு வருடகாலமாக மருத்துவமனை ஒன்றினை நடாத்தி வந்த முஸ்லிம் வைத்தியர் ஒருவர் தலவாகலை பொலிஸாரினால் கைது செய்யபட்டுள்ளதாக தலவாகலை பொலிஸார் தெரிவித்தனர் இந்த கைது சம்பவம் 13.06.2019.வியாழகிழமை மதியம் 12மணி
அளவில் கைது செய்யபட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்

குறித்த மருத்துவமனையின் வைத்தியர் எம்.பி.பி.எஸ்.என்ற தகமையை கொண்ட
வைத்தியர் என தம்மை அடையாளபடுத்தி கொண்டு சில பெண்களுக்கு கருகலைபில் ஈடுபட்டு வந்துள்ளதாகவும் இந்த விடயத்தினை குறித்த மருத்துவமனையில் தொழில் புரிந்து வந்த தாதியரினால் தலவாகலை லிந்துளை நகரசபையின் தலைவர் அசோக்கசேபாலவிடம் அறிவித்ததை தொடர்ந்து குறித்த வைத்தியசாலைக்கு சென்ற தலவாகலை லிந்தளை நகரசபையின் தலைவர் மற்றும் பொலிஸார் வைத்தியசாலைக்கு சென்று சோதனையிட்டபோது குறித்த வைத்தியர் எம்.பி.பிஎஸ் தகைமையுடையவர் அல்ல என்பது பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரனைகளில் இருந்து தெரியவந்துள்ளதோடு அவரிடம் இருந்து சான்றுதல் அனைத்தும் போலியாக தயாரிக்கபட்டது என பொலிஸார் மேலும் தெரிவித்தனர்

இதேவேலை இந்த மருத்துவமனையில் இருந்து பெருந்தொகையான மாத்திரைகளும் உபகரணங்களையும் பொலிஸார் மீட்டுள்ளதாகவும் இந்த வைத்தியர் சாய்ந்தமருது பகுதியை சேர்ந்த 49வயதுடைய சந்தேக நபரே இவ்வாறு கைது செய்யபட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்

கைது செய்யபட்ட போலி வைத்தியரை நுவரெலியா நீதவான் நீதிமன்றில் முன்னிலை படுத்துவதற்கான நடவடிக்கையினை பொலிஸார் மேற்கொண்டு வருவதோடு சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரனைகளை தலவாகலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடதக்கது.

 

(பொகவந்தலாவ நிருபர் எஸ்.சதீஸ்)

 1,628 total views,  4 views today

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )
mersin escort mersin escort mersin escort mersin escort mersin escort mersin escort kayseri escort konya escort malatya escort malatya escort erotik film film izle komedi film izle
error: Content is protected !!