முகப்புஎம்மை பற்றிவிளம்பரம்செய்திகள்தொடர்பு
Home > Slider > போதை ஒழிப்பு நிகழ்வு நடைபெற்ற இடத்திற்கு அருகில் புகைப்பிடித்த குழுவை மடக்கி பிடித்து அவர்களுக்கு போதை பொருள் சம்பந்தமான தெளிவூட்டல்லை வழங்கினர் பூண்டுலோயா பொலிசார்!!

போதை ஒழிப்பு நிகழ்வு நடைபெற்ற இடத்திற்கு அருகில் புகைப்பிடித்த குழுவை மடக்கி பிடித்து அவர்களுக்கு போதை பொருள் சம்பந்தமான தெளிவூட்டல்லை வழங்கினர் பூண்டுலோயா பொலிசார்!!

பூண்டுலோயா பொலிசாரால் போதை ஒழிப்பு சம்பந்தமாக மக்களுக்கு தெளிவூட்டல் கருத்தரங்கு ஒன்று பூண்டுலோயா மண்டபமொன்றில் ஏற்பாடு செய்யப்பட்டது.இக்கருத்தரங்கில் ஜனாதிபதியால் நியமிக்கட்ட போதை ஒழிப்பு பிரிவின் வளவாளர் கலந்துக்கொண்டு தெளிவூட்டப்பட்டது.இக்கருத்தரங்கின் போது போதையொழிப்பு சம்பந்தமாக தெளிவுப்படுத்திக்கொண்டிருந்த சமயம் குறித்த மண்டப்பத்திற்கு அருகில் புகைப்பிடித்துக்கொண்டிருந்த குழுவொன்றை கையும் களவுமாக பிடித்தனர்.

பொலிசாரின் கைகளில் மாட்டிய குறித்த குழுவை பொலிசார் போதைவஸ்து பாவிப்பதால் ஏற்படும் தீமைகளை எடுத்துரைத்து அக்குழுவிற்கான தெளிவூட்டல்களை வழங்கினர்.அதன்போது அக்கருத்தரங்கில் கலந்துக்கொண்ட வாகன சாரதிகள் ,பொதுமக்கள் ஆகியோர் பூண்டுலோயா பொலிஸ் அதிகாரிகளுக்கு பாராட்டுகளை தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.

 

தகவல்: நீலமேகம் பிரசாந்த்

Leave a Reply

error: Content is protected !!